தலைப்பை மாற்றச் சொல்லி கடும் நெருக்கடி... பதிலுக்குப் பாக்கியராஜ் செய்த வேலை!

bhagyaraj
இயக்குனர் இமயம் பாரதிராஜாவிடம் உதவியாளராக பணியாற்றியவர் பாக்கியராஜ். இவர் 16 வயதினிலே, சிகப்பு ரோஜாக்கள் படங்களில் பணியாற்றியுள்ளார். இவர் நடித்த முதல் படம் புதிய வார்ப்புகள்.
திரைக்கதை மன்னன்
Also read: என்னை கொலை பண்ண வச்சிடாதீங்க…! சிவகுமார் சினிமாவை விட்டு விலக இதான் காரணமாம்…!
தமிழ்த்திரை உலகில் 'திரைக்கதை மன்னன்' என்று போற்றப்பட்டவர் நடிகர் பாக்கியராஜ் என்பது நாம் அறிந்தது தான். ஏன்னா அவரது படங்கள் எல்லாமே அடுத்தடுத்த காட்சிகள் என்ன என்பதை யூகிக்க முடியாதவாறு சஸ்பென்ஸாக இருக்கும்.
அந்தவகையில் அவரது படங்களில் அவரே ஹீரோவாக நடித்து, இயக்கியும் வந்தார். சுவரில்லாத சித்திரங்கள், கன்னிப்பருவத்திலே படங்களில் நடித்து தயாரித்து இயக்கிய படம் ஒரு கை ஓசை. 1980ல் இந்தப் படம் வெளியானது. பல கட்ட சோதனைகளைச் சந்தித்தப் படம் இது என்று சொல்லலாம்.
கடும் எதிர்ப்பு
இந்தப் படத்தோட தலைப்பைப் பார்த்ததும் விநியோகஸ்தர்கள் அனைவரும் திரண்டு முதல்ல படத்தோட தலைப்பை மாற்றுங்க. ஒரு கை ஓசை எப்படி வரும்னு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதற்கு பாக்கியராஜ் சொன்ன பதில் இதுதான். சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும்.
சுவரில்லாத சித்திரங்கள்
ஆனா நான் சுவரில்லாத சித்திரங்கள்னு படம் எடுத்தேன். அது வெற்றி பெற்றது. அப்படித்தான் இதுவும் கண்டிப்பாக வெற்றி பெறும் என்றாராம். அதற்கு பாக்கியராஜின் பலமே அவருடைய மேனரிஸம் தான். அதுமட்டுமல்லாமல் அவரது டயலாக்கும் ரொம்பவே ஃபேமஸ்.
படம் ஓடாது

bhagyaraj
கதைப்படி கதாநாயகன் வாய்பேச முடியாதவர். எனவே படம் ஓடாதுன்னும் சொன்னாங்க. அதுக்கும் பாக்கியராஜ் 'சளைக்காமல் பதில் சொன்னார். பேசமுடியாதவனுக்கு வாழ்க்கையில வேற நல்ல மகிழ்ச்சியான விஷயங்களே நடக்கக்கூடாதா' என்று கேட்டார். அடுத்தும் குழப்பம் வந்தது. நடிகை அஸ்வினி முகம் படத்தில் சோகமாக இருக்கும். சாந்தமாக இருப்பார். உதிரிப்பூக்கள் படத்தில் அப்போதுதான் நடித்தும் இருந்தார்.
Also read: கோட்டும், வேட்டையனும் இல்ல… இந்த வருச உண்மையான சூப்பர்ஹிட் இதுதான்!.. பிரபலத்தின் பக்கா ரிப்போர்ட்..
படத்தில் அவர் ரொம்ப வயசானவரா தெரியறாரேன்னு சொன்னாங்க. ஆனால் அதற்கு பதில் சொல்லவில்லை பாக்கியராஜ். ஏன்னா இந்தப் படத்தில் பாக்கியராஜ் அவரை வேறொரு கோணத்தில் காட்ட விரும்பினார்.
சூப்பர் டூப்பர் ஹிட்

oru kai osai
படம் வெளியானது. சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. வாய்பேசாவிட்டாலும் பாக்கியராஜின் நடிப்பு பிரமாதமாக இருந்தது. செந்தில் அறிமுகமான படமும் இதுதான். எல்லா சோதனைகளும் வந்தாலும் எல்லாவற்றையும் முறியடித்து அவற்றை சாதனைகளாக ஆக்கிக் காட்டுவதில் கில்லாடி பாக்கியராஜ் தான் என்றால் மிகையில்லை.