பாக்கியராஜின் ஹிட் படத்தில் நடித்த அவரின் முதல் மனைவி!.. அவர் இறந்ததுக்கும் காரணம் இதுதானா?..

Published on: November 17, 2023
---Advertisement---

Bakkiyaraj: தமிழ் சினிமாவின் இயக்குனர்களில் முக்கியமானவர் பாக்கியராஜ். அவர் தன்னுடன் நடித்த இரண்டு நடிகைகளையும் கல்யாணம் செய்து கொண்டவர். பூர்ணிமா பாக்கியராஜ் அவருடன் தற்போது வாழ்ந்து கொண்டு இருக்கும் நிலையில் முதல் மனைவி குறித்த தகவல்கள் ஆச்சரியமானதாக இருக்கிறது.

பாரதிராஜாவின் உதவி இயக்குனராக அறிமுகம் ஆனவர் பாக்கியராஜ். அவரின் மூன்றாவது படமான சிகப்பு ரோஜாக்கள் படத்தில் இரண்டு காட்சிகளில் பாக்கியராஜ் நடித்து இருப்பார். அதுமட்டுமல்லாமல் வசனமும் அவர்தான் எழுதி இருந்தார்.

இதையும் படிங்க: இப்படி நான் பேச மாட்டேன்!. வடிவேலு நடிக்க மறுத்த சூப்பர் காமெடி!.. அப்புறம் அவர் சொல்லிதான் நடிச்சாராம்!..

அதை தொடர்ந்து, தனது அடுத்த படமான புதிய வார்ப்புகள் படத்தில், பாக்யராஜை வசனகர்த்தாவாக மட்டுமன்றி கதாநாயகனாகவே அறிமுகம் செய்தார்  பாரதிராஜா. அப்போதே அவருக்கு நல்ல இடம் கோலிவுட்டில் கிடைத்தது. தொடர்ந்து இயக்குனராக சுவரில்லாத சித்திரங்கள் படத்தில் எண்ட்ரி கொடுத்தார்.

இப்படி அவர் உயர்ந்து கொண்டு இருந்த சமயத்தில் அவரின் காதலியான ப்ரவீணாவும் சினிமாவில் வாய்ப்புகள் தேடிக்கொண்டு இருந்தார். அப்போது அவருக்கு கிடைத்த முக்கிய வாய்ப்பு தான் பாமா ருக்மணி. இப்படத்தினை ஆர்.பாஸ்கரன் இயக்கியிருந்தார். எம்.எஸ்.விஸ்நாதன் இப்படத்தில் நான்கு பாடலை இசையமைத்திருந்தார்.

பாமாவாக ராதிகாவும், ருக்மணியாக ப்ரவீணாவும் நடித்திருப்பார்கள். காமெடிக்கு பஞ்சம் இல்லாத இப்படத்திற்கு அப்போதே மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. இப்படம் ரிலீஸாகி அடுத்த வருடமே ப்ரவீணாவை பாக்கியராஜ் திருமணம் செய்து கொண்டார். இது காதல் திருமணம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: இளையராஜாவுக்கு நோ சொன்ன படக்குழு..! பிடிவாதமாக நின்று சாதித்து காட்டிய பஞ்சு அருணாச்சலம்.. எந்த படம் தெரியுமா?

Akhilan

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.