இளையராஜாவுக்கு நோ சொன்ன படக்குழு..! பிடிவாதமாக நின்று சாதித்து காட்டிய பஞ்சு அருணாச்சலம்.. எந்த படம் தெரியுமா?

0
406

ilayaraja: கோலிவுட்டின் அடையாளமாக மாறி போனவர் தான் இசைஞானி இளையராஜா. ஆனால் அவர் கோலிவுட்டுக்கு வந்ததே பல போராட்டங்களை தாண்டி தான். அவரின் முதல் படத்தில் தயாரிப்பாளரை தவிர மற்ற அனைவரும் நோ சொன்ன சம்பவமும் நடந்து இருக்கிறது.

சாதாரண கமர்சியல் படமாக வெளிவந்த திரைப்படம் தான் அன்னக்கிளி. இப்படத்தில் சுஜாதா, சிவகுமார், படாபட் ஜெயலட்சுமி, ஸ்ரீகாந்த், தேங்காய் ஸ்ரீனிவாசன், செந்தாமரை உள்ளிட்ட பல முக்கிய நடிகர்கள் இப்படத்தில் நடித்திருந்தனர். தேவராஜ் – மோகன் இணைந்து இயக்கிய இப்படத்தினை பஞ்சு அருணாச்சலம் தயாரித்தார்.

இதையும் படிங்க: விஜயகாந்தால் தான் இது நடந்தது… அப்போ நான் என்ன சும்மாவா? சபதம் எடுத்து வெற்றி பெற்ற இயக்குனர்..!

எப்போதுமே எஸ்.பி.டி பிலிம்ஸ் நிறுவனத்தின் கீழ் பஞ்சு அருணாச்சலம்  தயாரிக்கும் படங்களுக்கு விஜயபாஸ்கர் தான் இசையமைப்பாளராக இருப்பார். அப்படங்களும் அப்போதைய காலத்தில் சூப்பர்ஹிட்டாகும். ஆனால் தற்போது பஞ்சு அருணாச்சலம் மாற்றம் செய்யணும் என ஐடியா செய்கிறார்.

அன்னக்கிளி படத்தில் தமிழ் சினிமா இசையில் புதுமையை கொண்டு வர வேண்டும் என்ற ஆசையில் இளையராஜாவை அறிமுகப்படுத்த முடிவு செய்கிறார். ஆனால் படக்குழு யாருமே இளையராஜா வேண்டாம். விஜயபாஸ்கரே ஓகே எனக் கூறி இருக்கின்றனர்.

ஆனால் பஞ்சு அருணாச்சலம் அதுக்கு சம்மதம் சொல்லவில்லையாம். அவரின் பிடிவாதத்தாலே அன்னக்கிளிக்கு இளையராஜா இசையமைத்தாராம். படம் ரிலீஸாகி பெரிய அளவில் ஹிட் கொடுத்த போது கூட யாரும் இளையராஜாவை பாராட்டவில்லை. படம் 100 நாட்களை தாண்டும் வரை இதே கதை தானாம்.

இதையும் படிங்க: இப்படி நான் பேச மாட்டேன்!. வடிவேலு நடிக்க மறுத்த சூப்பர் காமெடி!.. அப்புறம் அவர் சொல்லிதான் நடிச்சாராம்!..

அதை தொடர்ந்து படம் சூப்பர் ஹிட் வெற்றியால் 100 நாட்களுக்கு மேல் திரையரங்கில் ஓடத் தொடங்கிய பின்னரே இளையராஜாவுக்கும் லைக்ஸ் தட்டி இருக்கின்றனர். அதன் பின்னரே இளையராஜாவை இசைஞானி என சினிமா ரசிகர்கள் ஓகே செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

google news