விஜயகாந்தால் தான் இது நடந்தது… அப்போ நான் என்ன சும்மாவா? சபதம் எடுத்து வெற்றி பெற்ற இயக்குனர்..!

Vijayakanth: தமிழ் சினிமாவில் ஒவ்வொரு காலத்தில் ஒரு ட்ரெண்ட் ஒருமுறை நடிகருக்காக பார்த்த ரசிகர்கள், மற்றொரு முறை இயக்குனருக்காக தியேட்டருக்கு வருவார்கள். அப்படி ஒரு காலத்தில் விஜயகாந்தின் படம் வந்தாலே அது சூப்பர்ஹிட் என்ற லிஸ்ட்டில் இருந்தது. இதற்கு இயக்குனர் ஒருவர் செய்த சம்பவம் தான் ஆச்சரியத்தினை கிளப்பி இருக்கிறது.

கேப்டன் விஜயகாந்தின் ஆக்‌ஷன் படங்களுக்கு எப்போதுமே ரசிகர் கூட்டம் அதிகம். அப்போது இயக்குனராக வந்த ஆபாவாணனின் முதல் படமான ஊமை விழிகள் மிகப்பெரிய ஹிட் படமாக அமைந்தது. அதையடுத்து அவர் இயக்கத்தில் விஜயகாந்த் நடித்த உழவன் மகள், செந்தூர பூவே இரண்டுமே ஹிட்டானது.

இதையும் படிங்க: பாக்கியாவுக்கு நேரம் சரியில்லை போல… காண்ட்ராக்ட்டில் வந்த பிரச்னை.. கோபி சபதம் ஜெயிச்சிட்டோ..?

தொடர்ச்சியாக ஆபாவாணன் ஹிட் படங்களை கொடுத்தாலும் இதற்கு காரணம் விஜய்காந்த் தான். அவரால் தான் மூன்று படமும் ஹிட்டானது எனக் கிசுகிசுத்தனர். ஆனால் இதில் ஆபாவாணன் கடுப்பானார். அப்போ என்னோட அடுத்த படத்தில் முன்னணி நடிகர் இல்லாமல் ஹிட் கொடுக்கிறேன் என்கிறார்.

அதனையடுத்து செந்தூர பூவே படத்தில் நடித்த ராம்கி, அப்போது வளார்ந்து வந்த அருண்பாண்டியனை வைத்து இணைந்த கைகள் படத்தினை இயக்கினார். இருந்தும் இப்படத்தில் எல்லா காட்சிகளும் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டு இருந்தது. கோலிவுட்டின் பெஸ்ட் இடைவேளைகளின் லிஸ்ட்டில் இணைந்த கைகளும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: மீனாவை திட்டிய விஜயா.. ஒரே வார்த்தையில் அடக்கிய பார்வதி… இதாது உடனே முடிஞ்சிதே..!

ஆபாவாணன் இயக்கிய முதல் மூன்று படங்களுமே மிகப்பெரிய ஹிட். இதனால் அவரின் இணைந்த கைகள் படத்துக்கு அதீத எதிர்பார்ப்பு நிலவியது. முதல் முறையாக ஒரு தமிழ் படம் இன்று முதல் இந்தியாவெங்கும் என ப்ரோமோட் செய்யப்பட்டப்பட்டது இன்னமும் ஆச்சரிய விஷயமாக பார்க்கப்படுகிறது.

ஆபாவாணன் சொன்னபடியே முன்னணி நடிகர்கள் இல்லாமல் ஒரு படத்தினை ஹிட் கொடுத்தார். அப்போதே இப்படத்துக்கு மிகப்பெரிய வரவேற்பு இருந்தது. கிட்டத்தட்ட இந்த படத்தின் வெற்றியை அப்போதையே நடிகர்களையே வாய் பிளக்க வைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Related Articles

Next Story