கோவில் மாடு மாதிரி தலைய ஆட்டு!.. படப்பிடிப்பில் கமலை வச்சி செய்த பாக்கியராஜ்..

Published on: June 30, 2023
---Advertisement---

பாரதிராஜா காலத்தில் தமிழ் சினிமாவில் பிரபலமாக இருந்த இயக்குனர்களில் முக்கியமானவர் பாக்கியராஜ். இயக்குனர் என்பதையும் தாண்டி நடிகராக மக்களிடம் அதிக வரவேற்பு பெற்றவர் இயக்குனர் பாக்கியராஜ். பாரதிராஜாவின் முதல் படத்திலிருந்து அவரிடம் உதவியாளராக பணிபுரிந்தார் பாக்கியராஜ்.

அதன் பிறகு தனியாக படம் இயக்க துவங்கியவர் பிறகு அதில் அவரே கதாநாயகனாக நடிக்க தொடங்கினார். ஏனெனில் சினிமாவில் நடிகனாக வேண்டும் என்பதே பாக்யராஜின் பெரும் ஆசையாக இருந்தது. உதவி இயக்குனராக இருந்த காலத்தில் பாரதிராஜா படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார் பாக்கியராஜ்.

bhagyaraj
bhagyaraj

அப்போதெல்லாம் ஜூனியர் ஆர்டிஸ்ட் யாராவது கிடைக்காத பட்சத்தில் உதவி இயக்குனரையே அந்த கதாபாத்திரத்தில் நடிக்க வைத்து விடுவார்கள் பாக்கியராஜ் திரைப்படங்களிலேயே பார்த்திபன் சின்ன கதாபாத்திரங்களில் நடித்திருப்பதை பார்க்க முடியும்.

கமலுடன் நடந்த சம்பவம்:

இப்படி 16 வயதினிலே திரைப்படத்தின் படப்பிடிப்பு நடக்கும் போது ஒரு நிகழ்வு நடந்துள்ளது. 16 வயதினிலே திரைப்படத்தில் ஒரு காட்சியில் ஜூனியர் ஆர்டிஸ்ட் இல்லாத காரணத்தினால் பாக்கியராஜை நடிக்க வைத்தார் பாரதிராஜா. ஆனால் கமல்ஹாசன் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. இவருக்கு அவ்வளவாக நடிக்க வரவில்லை எனவே இவர் வேண்டாம் என கூறிவிட்டார் கமல்ஹாசன்.

இருந்தாலும் கமல்ஹாசன் பேச்சை மீறி பாக்யராஜை நடிக்க வைத்தார் பாரதிராஜா. அப்போது அந்த காட்சியை படமாக்கும் போது பாக்கியராஜ் கமலிடம் வசனங்களை கூறும் பொழுதே வேண்டுமென்று தலையை ஆட்டிக் கொண்டே இருந்துள்ளார் சப்பாணி கதாபாத்திரமான கமல்ஹாசன். அதனை பார்த்து கோபமான பாக்கியராஜ் என்ன சொன்னாலும் கோயில் மாடு மாதிரி தலையை ஆட்டிக்கிட்டே இரு என்று வசனத்தில் இல்லாத டயலாக் ஒன்றை கூறி கமலை கலாய்த்து விட்டார்.

பிறகு அவரை அழைத்த பாரதிராஜா ஏன் வசனத்தில் இல்லாததை பேசினாய் என கேட்கும் பொழுது கமல்ஹாசன் வேண்டும் என்று தலையாட்டி கொண்டிருந்தார் அதற்காகதான் அந்த வசனத்தை பேசினேன் என்று கூறியுள்ளார் பாக்கியராஜ்.

இதையும் படிங்க: எங்கயும் நாங்க கில்லி! கோலிவுட்டில் சொல்லி அடிக்கும் பிறமொழி நடிகர்கள்

Rajkumar

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.