More
Categories: Cinema History Cinema News latest news

தேவையில்லாம மூக்கை நுழைத்த பாக்கியராஜ்… சரிபட்டு வராதுனு முடிவையே மாத்திய சசிகுமார்…

Sasikumar: தமிழ் சினிமாவில் சுப்ரமணியபுரம் திரைப்படத்தின் மூலம் இயக்குனராகவும் நடிகராகவும் அறிமுகமானவர் நடிகர் சசிகுமார். இப்படத்தின் தயாரிப்பாளரும் இவரே. தனது அறிமுகப்படமே இவருக்கு வெற்றிப்படமாக அமைந்தது. மேலும் இப்படத்தின் வெற்றியின் மூலம் இவர் குறிப்பிடத்தக்க இயக்குனர்களில் வரிசையில் இடம்பிடித்தார்.

மேலும் நாடோடிகள், சுந்தரபாண்டியன் என இவர் இயக்கிய அடுத்தடுத்த திரைப்படங்கள் இவருக்கு வெற்றிப்படங்களாகவே  அமைந்தன. இவர் பல திரைப்படங்களுக்கு தயாரிப்பாளராக இருந்தாலும் இவர் தயாரித்த திரைப்படமான தாரை தப்பட்டை திரைப்படத்தின் மூலம் மிகப்பெரிய நஷ்டத்தை சந்தித்தார்.

Advertising
Advertising

இதையும் வாசிங்க:இருவேறு துறைகளில் 60 ஆண்டுகளை கடந்த ஜாம்பவான்கள்.. கமலை இந்த அளவுக்கு யாரும் பாராட்டி இருக்கவே முடியாது

பின்னர் இயக்கத்தை விட்டு விட்டு பல திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார். அப்படம் வெளியாகிறதோ இல்லையோ அதை பற்றி கூட கவலைபடாமல் இவர் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார். ஆனால் அப்படங்கள் அனைத்தும் பெரிதளவில் பேசப்படவில்லை என்றுதான் கூறவேண்டும்.

பின் இவர் நடித்த எம்ஜிஆர் மகன், உடன்பிறப்பே போன்ற திரைப்படங்கள் இவருக்கு ஓரளவு பெயரை பெற்று தந்தன. ஆனால், அயோத்தி திரைப்படம் பாராட்டுக்களை பெற்றது. இவர் முதலில் சுப்பிரமணியபுரம் திரைப்படத்தில் கதாநாயகனாய் நடிக்க பாக்கியராஜின் மகன் ஷாந்தனுவைதான் அழைத்தாராம்.

இதையும் வாசிங்க:பாதி படத்துல சம்பளத்தை ஏத்திக்கேட்ட சிம்பு!.. உருப்புடாம போனதுக்கு இதுவும் முக்கிய காரணம்…

ஆனால் அப்படத்தின் கதையில் பாக்கியராஜ் அதிக அளவில் குறுக்கிட்டாராம். கதைகளில் சில மாற்றங்களை கொண்டுவர சொன்னாராம். அதை விரும்பாத சசிகுமார் பின்னர் அப்படத்தில்  இருந்து ஷாந்தனுவை நீக்கி விட்டாராம். அதன்பின் அந்த நேரத்தில் சென்னை 600028 திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்ததால் அப்படத்தில் நடித்த ஜெய்யை நடிக்க அழைத்தாராம்.

பின் பரமன் கதாபாத்திரத்திற்கு நடிப்பதற்கு பல கதாபாத்திரத்தை தேடி அழைந்தாராம். ஆனால் அவர் எதிர்பார்த்த அளவு நட்சத்திரங்கள் கிடைக்காததால் பின்னர் தானே அக்கதாபாத்திரத்தில் நடிக்கலாம் என முடிவெடுத்து நடித்தாராம்.

இதையும் வாசிங்க:எம்ஜிஆரை கிண்டலடித்த சிவாஜி.. பதிலுக்கு புரட்சித்தலைவர் என்ன செய்தார் தெரியுமா?

Published by
amutha raja

Recent Posts