Connect with us
bhagyaraj

Cinema History

அந்த ஹீரோவை திட்டுவதற்காக வசனம் வைத்த பாக்கியராஜ்!.. அவருக்கு என்ன காண்டோ!..

பாரதிராஜா உதவியாளர்:

பாரதிராஜாவிடம் உதவியாளராக பணிபுரிந்தவர் பாக்கியராஜ். 16 வயதினிலே, கிழக்கே போகும் ரயில் என பல படங்களில் உதவி இயக்குனரக இருந்துள்ளார். அதன்பின் பாக்கியராஜை அவரே ஹீரோவாக அறிமுகப்படுத்தினார். ஒருகட்டத்தில் தானே கதை எழுதி இயக்க துவங்கினார் பாக்கியாராஜ். பாரதிராஜாவிடம் இருந்த சிறந்த உதவியாளர்களில் பாக்கியராஜ் முக்கியமானவர்.

bhagyaraj

bhagyaraj

பிரிந்து சென்ற இயக்குனர்கள்:

ஒரு இயக்குனரிடமிருந்து நல்ல உதவியாளர்கள் பிரிந்து சென்றால் அது அந்த இயக்குனருக்கு கோபத்தை ஏற்படுத்தும். ஆனாலும், திரையுலகில் அது தவிர்க்க முடியாதது. இது பாக்கியராஜுக்கும் நடந்துள்ளது. ஏவிஎம் நிறுவனம் தயாரிப்பில் பாக்கியராஜ் கதை, திரைக்கதை, வசனம் எழுதி நடித்து இயக்கிய திரைப்படம் ‘முந்தானை முடிச்சி’. இந்த படம் 1983ம் வருடம் வெளியானது.

இதையும் படிங்க: ஃபிளாப் படம் கொடுத்த பெரிய இயக்குனர்கள்!. தயாரிப்பாளர் தலையில் துண்டு போட்ட 5 படங்கள்..

இந்த படத்தில் ஊர்வசி அறிமுகமானார். இளையராஜாவின் இசையில் அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட். படமும் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வெள்ளி விழா படமாக அமைந்தது.

bhaki

bhagyaraj

வசனத்தில் காட்டிய கோபம்:

பாக்கியராஜிடம் பாண்டியராஜன், லிவிங்ஸ்டன், பார்த்திபன், ஜி.எம்.குமார் என பலரும் உதவி இயக்குனர்களாக வேலை செய்தனர். இதில், பாண்டியராஜன் தனியாக சென்று கன்னி ராசி, ஆண் பாவம் என ஹிட் படங்களை கொடுத்து இயக்குனராகி விட்டார்.  நடிகராகவும் மாறிவிட்டார். அதேபோல், லிவிங்ஸ்டனும், ஜி.எம்.குமாரும் அவரிமிருந்து பிரிந்து தனியாக படம் இயக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போதுதான் பாக்கியராஜ் முந்தானை முடிச்சி படத்தை எடுத்தார்.

அந்த படத்தில் ஊர்வசியுடன் வரும் சின்ன பையன்களை பார்த்து ‘டேய் குரு துரோகிகளா.. இப்படி அநியாயத்துக்கு விட்டுட்டு போயிட்டீங்களேடா!’ என வசனம் வைத்திருப்பார். இது பாண்டியாரஜன், லிவிங்ஸ்டன் மற்றும் ஜி.எம்.குமார் ஆகியோரை மனதில் வைத்து அவர் பேசியதுதான் என நடிகர் ரமேஷ் கண்ணா ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.

அந்த மூன்று பேருமே பின்னாளில் முழுநேர நடிகராக மாறிவிட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ஃபிளாப் படம் கொடுத்த பெரிய இயக்குனர்கள்!. தயாரிப்பாளர் தலையில் துண்டு போட்ட 5 படங்கள்..

google news
Continue Reading

More in Cinema History

To Top