ராதிகாதான் ஹீரோயினா?... வேண்டவே வேண்டாம்… கெத்து காட்டிய பாக்யராஜ்… ஆனா காரணமே வேற!

Bhagyaraj
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக திகழ்ந்து வரும் ராதிகா, 1978 ஆம் ஆண்டு “கிழக்கே போகும் ரயில்” என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இத்திரைப்படத்தை பாரதிராஜா இயக்கியிருந்தார். இதில் சுதாகர் கதாநாயகனாக நடிக்க, ஆர்.செல்வராஜ் இத்திரைப்படத்திற்கான கதையை எழுதியிருந்தார்.

Kizhakke Pogum Rail
பாக்யராஜ், தொடக்கத்தில் இயக்குனர் பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்து வந்தார். “16 வயதினிலே”, “கிழக்கே போகும் ரயில்”, “சிகப்பு ரோஜாக்கள்” போன்ற பாரதிராஜாவின் படங்களில் அவர் உதவி இயக்குனராக பணியாற்றினார். இதில் குறிப்பாக “சிகப்பு ரோஜாக்கள்” திரைப்படத்தில் வசனக் கர்த்தாவாகவும் பாக்யராஜ் பணியாற்றினார்.
இந்த நிலையில் “கிழக்கே போகும் ரயில்” திரைப்படம் உருவாவதற்கு முன்பு பாரதிராஜா, கதாநாயகி வேடத்திற்கான தேடலில் ஈடுபட்டிருந்தாராம். அப்போது அவரது கைக்கு ஒரு ஆல்பம் கிடைத்ததாம். அந்த ஆல்பத்தில்தான் ராதிகாவின் புகைப்படத்தை பார்த்திருக்கிறார் பாரதிராஜா.

Bharathiraja
அப்போதே பாரதிராஜா ராதிகாதான் இந்த படத்திற்கான சரியான ஆள் என முடிவெடுத்துவிட்டாராம். எனினும் ஒரு முறை நேரில் சென்று பார்த்துவிட்டு வரலாம் என்று அவருக்கு தோன்றியிருக்கிறது. உடனே நேரில் சென்று பார்த்திருக்கிறார் பாரதிராஜா.
ராதிகாவின் தோற்றம் மிகவும் பிடித்துப்போக “கிழக்கே போகும் ரயில்” திரைப்படத்திற்கு ஒப்பந்தம் செய்துவிட்டார் பாரதிராஜா. ஆனால் பாக்யராஜ்ஜுக்கோ ராதிகா நடிப்பதில் உடன்பாடே இல்லாமல் இருந்ததாம். தனது குருநாதரான பாரதிராஜா மீதுள்ள அக்கறையினால்தான் இவ்வாறு கூறினாராம்.

Bhagyaraj
அதாவது பாரதிராஜாவின் “16 வயதினிலே” திரைப்படம் மாஸ் ஹிட் ஆன திரைப்படம். ஆதலால் மிகவும் கவனத்தோடு இருக்கவேண்டும் என்ற எண்ணத்தில் அவ்வாறு கூறியிருக்கலாமாம்.
எனினும் பின்னாளில் பாக்யராஜ் நடித்து இயக்கிய பல திரைப்படங்களில் ராதிகா கதாநாயகியாக நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இத்தகவலை பிரபல நடிகரும் தயாரிப்பாளருமான சித்ரா லட்சுமணன் தனது வீடியோ ஒன்றில் பகிர்ந்துள்ளார்.
இதையும் படிங்க: அட்டர் ஃப்ளாப் ஆனாலும் அந்த விஷயத்தில் முரண்டுபிடிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்… இதெல்லாம் கொஞ்சம் ஓவரா தெரில…