Connect with us
sandhanu

Cinema News

சாந்தனுவுக்கு இப்படி ஒரு நிலைமையா?… அதிருப்தியில் பாக்யராஜ்!..

தமிழ் சினிமாவில் இயக்குனராக நடிகராக திரைக்கதையாசிரியராக வலம் வருபவர் பாக்யராஜ். 80களில் இவரின் நடிப்பில் பல ஹிட் படங்களை கொடுத்திருக்கிறார். அதுமட்டுமில்லாமல் இவரின் இயக்கத்திலும் ஏகப்பட்ட வெற்றிப் படங்கள் தமிழ் சினிமாவை அலங்கரித்திருக்கின்றனர்.

santhanu1

santhanu1

தமிழ் சினிமாவிலேயே பெஸ்ட் ஸ்கீரின்ப்ளேக்கு பேர் வாங்கியவர் பாக்யராஜ் தான். அப்பாவை போலவே மகனும் சினிமாவில் ஒரு இடத்தை அடைவார் என்று எதிர்பார்க்க ஆனால் அவரது மகனான சாந்தனுவுக்கு சொல்லும் படியாக படங்கள் வரவில்லை.

இந்த நிலையில் பெரிய எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருக்கும் படம் ‘ராவணக்கோட்டம்’. இந்தப் படத்தில் சாந்தனுவுக்கு ஜோடியாக கயல் ஆனந்தி நடிக்கிறார். படத்தை திட்டக்குடி கண்ணன் ரவி என்பவர் தயாரிக்கிறார். இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா துபாயில் கோலாகலமாக நடைபெற்றது. அதற்கான செலவே கோடிக்கணக்கில் ஆனது.

sandhanu2

sandhanu2

பத்து தல இசைவெளியீட்டு விழா நடந்த அதே நாளில் தான் ராவணக்கோட்டம் படத்தின் இசை வெளியீட்டு விழாவும் நடைபெற்றது. அதற்காக நடிகைகள் குஷ்பு, ராதிகா, மீனா, பத்திரிக்கையாளர்களில் சில பேர், அவர்களோடு கனிமொழி எம்பி, மற்றும் சில அரசியல் பிரமுகர் என பல பேர் கலந்து கொண்டனராம்.

ஆனால் அவ்ளோ பத்திரிக்கையாளர்களை அழைத்துக் கொண்டு போயும் ஒரு பத்திர்க்கையில் கூட ராவணக்கோட்டம் படத்தின் இசை வெளியீட்டு விழாவை பற்றி எந்த செய்தியும் வெளிவரவில்லையாம். அதோடு ஊடகங்களிலும் அந்தப் படத்தை பற்றி எந்த ஒரு செய்தியும் பேசப்பட வில்லையாம்.

sandhanu3

sandhanu3

இதனால் பாக்யராஜ் மிகுந்த மனவருத்ததில் இருந்தாராம். பத்து தல படத்தை பற்றி பக்க பக்கமாக பேசிய ஊடகங்கள் சில அரசியல் பிரமுகர்கள் வந்திருந்தும் ராவணக்கோட்டம் படத்தை பற்றி எதுவும் பேசவில்லை என்பதை நினைத்து பாக்யராஜ் புலம்பி தீர்த்திருக்கிறாராம். இதை பற்றி ஒரு பேட்டியில் பேசிய திரைவிமர்சகரான ராமானுஜம் அழைத்துக் கொண்டு போன செய்தியாளர்கள் அப்படி என்று கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க : ஒரு சாதாரண ரசிகனை வேற லெவலுக்கு கொண்டு சென்ற புரட்சித் தலைவர்… இப்படி ஒரு நடிகரா?…

அதாவது பக்தி செய்தியாளர்களை அரசியல் கூட்டத்திற்கு அழைத்துக் கொண்டு போனால் எப்படி இருக்கும்? அதே போல் தான் இதுவும். அச்சு ஊடகங்களில் இருந்து யாரையாவது அழைத்துக் கொண்டு போயிருந்தால் பத்திரிக்கைகளில் செய்தி வெளியாகியிருக்கும். விழா ஏற்பாட்டாளர்களின் கவனக் குறைவே இதற்கு காரணம் என்று கூறியிருக்கிறார்.

google news
Continue Reading

More in Cinema News

To Top