பாரதிராஜாவை நம்பாத பாக்கியராஜ்... அப்படி என்ன நடந்தது இந்த சிஷ்யனுக்கு..?

by sankaran v |   ( Updated:2024-06-13 21:37:14  )
BBr
X

BBr

ஒருவரை குருவாக ஏற்றுக்கொண்டால் சிஷ்யனானவன் குரு என்ன டெஸ்ட் வைத்தாலும் அனைத்திலும் வெற்றி பெற வேண்டும். சோதனையையும் சாதனையாக்க வேண்டும். குருவே நம்மை சோதிக்கிறாரே என்று எண்ணக்கூடாது. குருவின் மேல் முழு நம்பிக்கையையும் வைக்க வேண்டும்.

இதையும் படிங்க... வயசானாலும் சிக்குன்னு இருக்கு உடம்பு!.. ஜூம் பண்ணி ரசிக்க வைக்கும் சீரியல் நடிகை ரேஷ்மா…

அப்படி ஒரு முறை இந்த குருவினால் சிஷ்யனுக்கு ஒரு சோதனை வந்தது. அந்த சோதனையில் குருவின் மீதே நம்பிக்கை இல்லாமல் போய்விட்டது. இது வெறும் சம்பவம் தான். ஆனால் குருவானாவர் சொன்ன வாக்கைக் காப்பாற்றுவார் என்பது அந்த சிஷ்யனுக்குத் தெரியாமலேயே போய்விட்டது. கடைசியில் தான் அதை உணர்கிறான்.

அந்த வகையில் தமிழ்த்திரை உலகிலும் ஒரு சம்பவம் நடந்துள்ளது. பாரதிராஜாவின் பிரதான சிஷ்யர் யார் என்றால் அது பாக்கியராஜ் தான். ஆனால் ஒருமுறை அவருக்கே பாரதிராஜாவின் மீது நம்பிக்கை இல்லாமல் போய்விட்டதாம். அப்படி என்ன நடந்தது இந்த சிஷ்யனுக்கு என்று பார்ப்போமா...

'கிழக்கே போகும் ரயில்' படத்தில் வேலை பார்த்த போது அந்தப் படத்தில் உதவி இயக்குனராக இருந்த பாக்கியராஜ், படத்தில் நடித்த விஜயன் என இந்த ரெண்டு பேரிடமும் பாரதிராஜா 'உங்க ரெண்டு பேரையுமே கதாநாயகனாக ஆக்கணும்னு இருக்கேன்' என்று சொன்னாராம்.

ஆனால் அவர்கள் அதை நம்பவில்லையாம். பின்னாளில் நிறம் மாறாத பூக்கள் படத்தில் விஜயனும், புதிய வார்ப்புகள் படத்தில் பாக்கியராஜூம் கதாநாயகனாக ஆனார். பல மேடைகளில் நான் பாக்கியராஜை விமர்சித்து இருக்கிறேன்.

ஆனால் அவர் ஒருமுறை கூட என்னை விட்டுக்கொடுக்கவில்லை. 'எங்க டைரக்டர்'...னு இன்று வரை என்னைக் கொண்டாடுபவர் தான் பாக்கியராஜ் என்று பலமுறை பத்திரிகைகளில் பதிவு செய்துள்ளார் பாரதிராஜா.

மேற்கண்ட தகவலை பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க... இளையராஜாவுக்கு எக்கோ வச்ச பெரிய ஆப்பு!.. இதுக்கு பருத்தி மூட்டை குடோன்லயே இருந்திருக்கலாம்!..

1979ல் நிறம் மாறாத பூக்கள் படம் வெளியானது. அதே ஆண்டில் தான் புதிய வார்ப்புகள் படமும் வெளியானது. இரு படங்களுமே ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story