இதுதான் நடக்கும்!. எம்.ஜி.ஆருக்கு பானுமதி சொன்ன ஜோதிடம்!.. அட அப்படியே பலிச்சிடுச்சே!...

by சிவா |
mgr savithri
X

சினிமாவில் ஹீரோவாக நடித்து அரசியலிலும் பெரிய அளவுக்கு செல்ல வேண்டும் என இப்போது பல நடிகர்கள் ஆசைப்படுதற்கு விதை போட்டவர் எம்.ஜி.ஆர்தான். அவரால்தான் பல நடிகர்களுக்கும் முதலமைச்சர் ஆகும் எண்ணமும் ஏற்பட்டது. அதேநேரம், நாடகங்களில் நடித்து கொண்டிருந்தபோதும் சரி, சினிமாவில் நடித்த போதும் சரி எம்.ஜி.ஆருக்கு அரசியல் ஆசையெல்லாம் இருந்ததே இல்லை.

அதுவும் தமிழ்நாட்டின் முதலமைச்சராக வேண்டும் என அவர் ஆசைப்பட்டதே இல்லை. காலத்தின் கோலம் அவரை அந்த இடத்திற்கு அழைத்து சென்றது. ஆனால், எம்.ஜி.ஆர் அந்த நிலைக்கு செல்வார் என அப்போதே அவருடன் நடித்த நடிகை ஒருவர் ஜோதிடம் சொன்னார் என்றால் நம்ப முடிகிறதா?. உண்மையில் அது நடந்தது.

இதையும் படிங்க: நான் எழுதின பாட்ட கண்ணதாசன்னு நினைச்சார் எம்.ஜி.ஆர்!. வாலி சொன்ன சீக்ரெட்!..

பானுமதிக்கு கைஜோதிடம் பார்க்க தெரியும். ஒருநாள் படப்பிடிப்பில் எம்.ஜி.ஆர் தலையில் கிரீடத்துடன் அதாவது மன்னர் வேடத்தில் எம்.ஜி.ஆர் சிம்மாசனத்தில் அமர்ந்திருந்தார். அவரையே கொஞ்ச நேரம் பார்த்துக்கொண்டிருந்த பானுமதி எம்.ஜி.ஆரின் அருகில் சென்று ‘ராமச்சந்திரன் உங்கள் கையை கொடுங்கள். நான் ஜோதிடம் பார்க்கிறேன்’ என சொல்ல எம்.ஜி.ஆரோ ‘வேண்டாம் அம்மா.. எனக்கு அதில் நம்பிக்கையில்லை’ என சொன்னாராம்.

ஆனால், அருகிலிருந்தவர்கள் அவரை வற்புறுத்த எம்.ஜி.ஆர் பானுமதியிடம் கையை நீட்டினார். அவரின் ரேகையை பார்த்து கணித்த பானுமதி ‘ராமச்சந்திரன் பின்னாளில் நீங்கள் பேரும் புகழும் பெற்ற பெரிய தலைவராக வருவீர்கள். ஆனால், அது சினிமாவில் இல்லை’ என சொன்னார். எம்.ஜி.ஆர் கை கூப்பி ‘நன்றி அம்மா’ என சொன்னாராம்.

இதையும் படிங்க: எம்.ஜி.ஆர் படத்துக்கு வசனம் எழுத மறுத்த கலைஞர்!.. அப்புறம் நடந்ததுதான் மேஜிக்!…

அவர் சொன்னது போலவே பின்னாளில் எம்.ஜி.ஆர் தமிழகத்தின் முதல்வராகவும், இந்தியாவிலேயே மதிக்கத்தக்க ஒரு தலைவராகவும் மாறினார். அவர் முதன்முறை முதல்வராக பதவியேற்ற போது அவருக்கு பாராட்டு விழா நடந்தது.

அந்த விழாவில் பானுமதியும் கலந்துகொண்டார். அந்த விழாவில் பேசிய எம்.ஜி.ஆர் முன்வரிசையில் இருந்த பானுமதியை பார்த்து ‘நான் இந்த நிலைக்கு வருவேன் என நானே நினைக்காத காலத்தில் என் கைரேகையை பார்த்து பானுமதி சொன்னது இன்று பலித்துவிட்டது’ என சொல்ல கூட்டத்தில் கைதட்டல் அடங்க நீண்ட நேரமானதாம்.

இதையும் படிங்க: ரஜினி படமாக மாறிய எம்.ஜி.ஆர் படம்!. பரபரப்பு திருப்பம்!.. நடந்தது இதுதான்…

Next Story