போட்ட மொத்த ஆல்பமும் ஹிட்! ஆனா ஆளோ அவுட்.. தன்னடக்கத்தால் காணாமல் போன இசையமைப்பாளர்

Bharani: சில தினங்களாக தமிழ் சினிமாவில் இசை பெரிதா? பாடல் பெரிதா? என்பதை பற்றி ஒரு விவாதமே போய்க்கொண்டிருக்கின்றது. இதைப்பற்றி இளையராஜா அவருடைய உரிமைக்காக போராடிக் கொண்டிருக்கிறார். இளையராஜாவுக்கு ஆதரவாக ஒரு சிலரும் அவருக்கு எதிராக ஒரு சிலரும் அவரவர் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இளையராஜாவுக்கே இல்லாத ஒரு பெருமை இன்னொரு இசையமைப்பாளரிடம் இருந்தும் அவர் பெரிதாக எதுவும் அலட்டிக் கொள்ளாமல் தன்னுடைய தன்னடக்கத்தாலேயே இன்று காணாமல் போயிருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும் .அவர் வேறு யாரும் இல்லை இசையமைப்பாளர் பரணி. ஒரு படத்தை பொறுத்த வரைக்கும் ஒரு சில பாடல்கள் ஹிட் ஆகலாம். ஆனால் இவரைப் பொறுத்த வரைக்கும் இவர் இசை அமைத்த படத்தில் அமைந்த அத்தனை பாடல்களும் அதாவது ஆல்பம் ஹிட்டான பாடல்களாகவே அமைந்திருக்கின்றது.

இதையும் படிங்க: சகலகலா வல்லவன் பிளாக்பஸ்டர் ஹிட்!.. 100வது நாளில் கமல் செய்த காரியம்!.. நெகிழும் நடிகை…

இது இவருக்கே உண்டான பெருமை. ஆரம்பத்தில் இசையை பற்றியே தெரியாமல் வெறும் 85 ரூபாய் பணத்தை மட்டும் வைத்துக் கொண்டு தஞ்சாவூரில் இருந்து சென்னை வந்து ஒரு டீக்கடையில் வேலை பார்த்து பின் இளையராஜா வீட்டு முன் கால்நடையாக நடந்து இளையராஜாவின் வீட்டு உதவியாளர் மூலம் அவர் வீட்டுக்கு சென்று இசை என்றால் என்ன? பாட்டு என்றால் என்ன? என்பதை எல்லாம் தெரிந்து கொண்டு அங்கிருந்து எஸ் ஏ சந்திரசேகரின் அறிமுகம் கிடைத்து நாளைய தீர்ப்பு படத்திற்கு முதன் முதலில் பாட்டு எழுதியவர் பரணி.

அதாவது விஜய் ஹீரோவாக அறிமுகமான முதல் படத்திற்கு பாட்டு எழுதிய பெருமையும் இவருக்கு தான் உண்டு. அதன் பிறகு தான் பெரியண்ணா படத்தில் தன்னுடைய முதல் இசைப் பயணத்தை ஆரம்பித்திருக்கிறார். அந்தப் படத்தில் தான் இசையமைப்பாளராக அறிமுகமானார் பரணி. இவருடைய பாடல்களை கேட்டால் இவை எல்லாம் பரணி இசையமைத்த பாடல்கள் தானா என்ற அளவுக்கு நம்மை ஆச்சரியப்படுத்துகின்றன.

இதையும் படிங்க: மொத்தமா மண்ணை கவ்விய ‘மாயவன்’! இரண்டாம் பாகம் எடுப்பதற்கான காரணம் இதுதான்

பார்வை ஒன்றே போதுமே, சார்லி சாப்ளின், சுந்தரா ட்ராவல்ஸ், சிந்தாமல் சிதறாமல் போன்ற பல படங்களை சொல்லிக் கொண்டே போகலாம். இத்தனை வெற்றி படங்களுக்கு இசையமைத்த இவரை இதுவரை யாரும் தன் படங்களில் பயன்படுத்தவே இல்லை. திறமைக்கு மதிப்பே இல்லை என்பதற்கு உதாரணமாக இருக்கிறார் பரணி.அதற்கு காரணம் இவருடைய தன்னடக்கம். இவரின் அத்தனை பாடல்களும் ரசிக்கும்படியான பாடல்களாகவே அமைந்திருக்கின்றன.

 

Related Articles

Next Story