மொத்தமா மண்ணை கவ்விய ‘மாயவன்’! இரண்டாம் பாகம் எடுப்பதற்கான காரணம் இதுதான்

Maayavan Movie: தமிழில் 2017 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் மாயவன். சிவி. குமார் இயக்கத்தில் வெளிவந்த இந்த மாயவன் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி ஓரளவு வரவேற்பை பெற்று வந்தது. இதன் கதைக்களத்தை மக்கள் ரசித்த போதும் வசூலில் பெரிய அளவில் நஷ்டம் அடைந்த திரைப்படமாகத்தான் இந்த மாயவன் திரைப்படம் அமைந்தது.

இந்த படத்தைப் பார்த்த பல பேர் படத்தின் இயக்குனரான சி வி குமாரிடம் படத்தின் கதை மிகச் சிறப்பாக வந்திருக்கிறது. இன்னும் அடுத்தடுத்த படங்களின் மூலம் பெரிய இயக்குனராக வந்து விடுவீர்கள் என்றெல்லாம் சொல்லி அவரை உற்சாகப்படுத்தி இருக்கின்றனர். ஆனால் பெருமளவு நஷ்டம் அடைந்த திரைப்படமாகத்தான் வசூலில் இந்த படம் மண்ணைக் கவியது.

இதையும் படிங்க: எம்ஜிஆர் நடித்து 1200 கோடிக்கு மேல் வசூல் செய்த படம்!. இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!..

அதன் பிறகு கொரோனா காலத்தில் இந்த படத்தை ஓடிடியில் ரிலீஸ் செய்திருக்கின்றனர். அதில் மிகப்பெரிய அளாவில் வெற்றி பெற்ற திரைப்படமாக அந்த நேரத்தில் மாயவன் திரைப்படம் அமைந்ததாம். அது மட்டுமல்லாமல் ஹிந்தியிலும் தெலுங்கிலும் கிட்டத்தட்ட 40 மில்லியன் பேருக்கும் மேலாக இந்தப் படத்தை ஓடிடியில் பார்த்து ரசித்து இருக்கின்றனர்.

சமீபத்தில் மாயவன் 2 படத்தை அறிவித்தபோது இயக்குனர் சி வி குமாருக்கு ரசிகர்கள் தங்களுடைய ஆதரவை தெரிவித்து வந்தனர். அதில் ஒரு ரசிகர் இந்தப் படத்தை நாங்கள் திரையரங்கில் பார்க்காமல் விட்டதற்கு இன்றுவரை வருத்தப்பட்டு கொண்டிருக்கிறோம். ஓடிடியில் பலமுறை இந்த படத்தை பார்த்து விட்டோம். அதனால் இந்த இரண்டாம் பாகம் சீக்கிரம் வெளிவர வேண்டும் என ரசிகர்கள் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: எத்தனை பேர் வந்தாலும் நீதான் க்யூட்டு!.. ஜொள்ளுவிட வைக்கும் பிரியா பவானி சங்கர்…

அது மட்டும் அல்லாமல் ஓடிடியில் பார்த்த பிறகுதான் நாள்தோறும் சிவி குமாருக்கு தினமும் 100 குறுஞ்செய்திகள் வந்த வண்ணம் இருக்கிறதாம். ஹிந்தியிலும் இந்த படத்தை பார்த்த பிறகு ஹிந்தியில் பல பிரபலங்கள் இவரை அழைத்து பாராட்டியதாகவும் ஹிந்தியில் படத்தை இயக்குவதற்கான வாய்ப்பை தருவதாகவும் கூறுகிறார்களாம்.

இதை சமீபத்திய ஒரு பேட்டியில் சி.வி. குமார் அவருடைய அனுபவத்தை கூறினார். கூடிய சீக்கிரம் இந்த படத்தின் இரண்டாம் பாகம் வெளிவர இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார். அறிவியல் புனைவு திரில்லர் திரைப்படமாக அமைந்த இந்த மாயவன் திரைப்படத்தில் சந்திப் கிஷன், லாவண்யா திரிபாதி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். இவர்களுடன் சேர்ந்து டேனியல் பாலாஜி, ஜாக்கி சராப் போன்ற நடிகர்களும் இணைந்து நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது,

இதையும் படிங்க: அந்த விஷயத்துல எம்.ஜி.ஆரும் சிவாஜியும் வேற வேற!.. சீக்ரெட் சொல்லும் நாகேஷ்…

 

Related Articles

Next Story