பதினாறு வயதினிலே திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக மாறியவர் பாரதிராஜா. முதல் படத்திலேயே கவனம் ஈர்த்தார். அப்போது ஸ்டார்களாக வளர்ந்துவந்த கமலையும், ரஜினியையும் வித்தியாசமாக காட்டி கிராமத்து கதையை உருவாக்கி அதில் வெற்றி பெற்றும் காட்டினார்.
அந்த காலகட்டத்தில் திரைப்படங்கள் 95 சதவீதம் ஸ்டுடியோக்களில் மட்டுமே எடுக்கப்பட்டு வந்தது. அதை உடைத்து கேமராவை தூக்கிக்கொண்டு வாய்க்கால், வரப்பு பக்கம் போனவர்தான் பாரதிராஜா. கிராமத்து மனிதர்களின் அன்பை, கோபத்தை, அவர்களின் காதலை, வக்கிரத்தை, ஆவேசத்தை சினிமாவில் பதிவு செய்த முதல் இயக்குனர் பாரதிராஜா மட்டுமே..
இதையும் படிங்க: பாரதிராஜா மனதில் நினைத்ததை பாட்டில் சொன்ன கண்ணதாசன்!. இப்படி ஒரு தீர்க்கதரி்சியா?!..
அவருக்கு பின்னர்தான் மற்ற சில இயக்குனர்களும் அந்த துணிச்சல் வந்தது. பதினாறு வயதினிலே, கிழக்கே போகும் ரயில், அலைகள் ஓய்வதில்லை, கடலோர கவிதைகள், முதல் மரியாதை என தமிழ் சினிமாவின் முக்கிய படங்களை இயக்கியிருக்கிறார். இயக்குனர் இமயம் என்கிற பட்டமும் இவருக்கு கிடைத்தது.
இப்போது நடிகராக பல படங்களிலும் கலக்கி வருகிறார். சினிமாவை பொறுத்தவரை அவமானங்களை சந்திக்காமல் மேலே வர முடியாது. பாரதிராஜாவும் அதற்கு விதிவிலக்கல்ல. சில வருடங்களுக்கு முன்பு ஒரு சினிமா விழாவில் பேசிய பாரதிராஜா ‘நாகேஷ் நடித்த சர்வர் சுந்தரம் படம் உருவாகி வினியோகஸ்தர்களுக்காக ஏவிஎம் நிறுவனதில் உள்ள ஒரு தியேட்டரில் திரையிடப்பட்டது’.
இதையும் படிங்க: பாரதிராஜாவுக்கு இப்படி ஒரு நோயா?!.. அதிர்ச்சியில் நண்பர்கள்.. உறைந்து போன திரையுலகம்!..
எனக்கு தெரிந்த ஒருவன் என்னையும் அதற்கு அழைத்துப்போனான். படம் ஓடிக்கொண்டிருந்த போது அங்கு வந்த ஒருவர் என் சட்டையை பிடித்து வெளியே இழுந்து வந்து ‘நீ யார்?’ எனக்கேட்டார். நான் என்னை அழைத்து வந்தவனை கைக்காட்ட அவனோ ‘எனக்கு தெரியாது’ என சொல்லிவிட்டான். உடனே என்னை வெளியே தள்ளிவிட்டார்.
அப்போதுதான் ‘இப்போது என்னை கழுத்தை பிடித்து வெளியே தள்ளுகிறீர்கள். ஒருநாள் இதே இடத்திற்கு நான் வருவேன்’ என மனதில் வைராக்கியம் எடுத்தேன். கடுமையான உழைப்பால் அதை சாதித்தும் காட்டினேன்’ என அவர் பேசியிருந்தார். அவர் சொன்னது போலவே 1984ம் வருடம் ஏவிஎம் தயாரிப்பில் பாண்டியன், ரேவதி நடித்த புதுமைப்பெண் படத்தை பாரதிராஜா இயக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: வாலி சொன்ன ஒரு வார்த்தை!.. பாரதிராஜா வாழ்க்கையில் அப்படியே பலித்த அந்த சம்பவம்!..
இளையராஜா 'இசைஞானி'…
இந்தியா முழுவதும்…
தனுஷ் இயக்கத்தில்…
ஆர்.ஜே பாலாஜி…
இயக்குனர் அட்லீ…