பாரதிராஜா மனதில் நினைத்ததை பாட்டில் சொன்ன கண்ணதாசன்!. இப்படி ஒரு தீர்க்கதரி்சியா?!..

0
1330
bharathi

தமிழ் திரையுலகில் காலத்தால் மறக்கமுடியாத பல பாடல்களை எழுதியவர் கவிஞர் கண்ணதாசன். காதல், சோகம், தத்துவம், மகிழ்ச்சி, விரக்தி, குடும்பம் என எல்லாவாற்றையும் பாடியவர். எந்த மாதிரி சூழ்நிலையில் என்றாலும் அதை அப்படியே அழகாக தனது பாடல் வரிகளில் சொல்லிவிடுவார்.

ஒரு இயக்குனர் இரண்டரை மணி நேரம் சொல்ல வரும் கருத்தை, கதையை கண்ணதாசனின் சில வரிகள் அப்படியே சொல்லிவிடும். அதனால்தான், அவருக்காக தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் காத்திருந்தனர். தாமதமானாலும் அவரின் பாடலுக்காக பலரும் பலநாள் காத்திருந்த சம்பவங்களும் நிறைய உண்டு.

இதையும் படிங்க: கண்ணதாசன் எழுதின பாட்டுக்கு வாலி பெயர்!.. எம்.ஜி.ஆர் படத்தில் நடந்த அந்த சம்பவம்…

பாரதிராஜா இயக்கத்தில் ரஜினி, கமல், ஸ்ரீதேவி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து 1977ம் வருடம் வெளியான திரைப்படம் பதினாறு வயதினிலே. தமிழ் சினிமாவில் ஒரு புரட்சியை ஏற்படுத்திய திரைப்படம். இந்த படத்திற்கு பல சிறப்புகள் உண்டு. முதன் முதலில் ஒரு படம் முழுவதும் வெளிப்புற படப்பிடிப்பில் நடந்தது இந்த படத்திற்குதான். கமலும், ஸ்ரீதேவியும் இவ்வளவு சிறந்த நடிகர்கள் என்பதை காட்டிய படம்.

இந்த படத்தில் ஸ்ரீதேவியுடன் சப்பாணி வேடத்திலிருக்கும் கமல் சந்தைக்கு போவார். அம்மா இறந்துவிட்ட சோகத்தில் இருக்கும் ஸ்ரீதேவியை எதையாவது பண்ணி சிரிக்க வைக்க வேண்டும் என நினைக்கும் சப்பாணி தனது வாய்க்கு வந்ததை பாட்டாக பாடுவார். இதற்கு பாடல் எழுத கண்ணதாசன் வந்திருந்தார்.

இதையும் படிங்க: நாள் முழுக்க தூங்கி கொண்டே இருந்த கண்ணதாசன்!. கடுப்பில் கத்திய எம்.எஸ்.வி.. வந்ததோ சூப்பர் பாட்டு!..

சூழ்நிலையை கேட்டதும் ‘ஆட்டுக்குட்டி முட்டையிட்டு கோழிக்குஞ்சு வந்ததுன்னு யானைக்குஞ்சு சொல்லக்கேட்டு பூனைக்குஞ்சு சொன்னதுண்டு’ என கண்ணதாசன் வரிகளை சொல்ல அவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. வசனம் போல் சொல்கிறாரோ என நினைத்தனர். ஆனால், மெட்டோடு சேர்த்து வரிகளை பாடினால் அப்படியே பொருந்தியதை பார்த்து அசந்துபோனார்கள்.

இந்த பாட்டின் இடையில் சப்பாணியின் பாட்டுக்கு எசப்பாட்டு பாடுவது போல ஒரு மூதாட்டி வந்து பாடுவார். அவர் பாடி முடிக்கும்போது ‘பழைய நினைப்புடா பேராண்டி.. பழைய நினைப்புடா பேராண்டி’ என முடித்திருப்பார். இங்குதான் ஆச்சர்யம். ஏனெனில், கண்ணதாசன் வருவதற்கு முன் இந்த பாடல் பற்றி ஆலோசித்த இளையராஜா, பாரதிராஜா இருவரும் இந்த இடத்தில் ‘பழைய நினைப்புடா தம்பி.. பழைய நினைப்புடா தம்பி’ என முடிக்க வேண்டும் என யோசித்து வைத்திருந்தனர்.

கண்ணதாசன் பாடலை சொல்லும்போது இதை அவரிடம் சொல்லலாமா? சொன்னால் என் பாட்டில் நீங்கள் வரிகளை சொல்கிறீர்களா என கோபப்படுவாரா?.. சொல்லாமல் அந்த வரியை சேர்த்தால் நான் எழுதிய பாட்டில் என்னை கேட்காமல் நீங்கள் எப்படி வரியை சேர்க்கலாம் என கோபப்படுவாரா? என யோசித்து கொண்டிருந்தனர். ஆனால், பாரதிராஜா மனதில் நினைத்த அந்த வரியை கண்ணதாசன் சொன்னதை கேட்டு அனைவரும் ஆச்சர்யத்தின் உச்சிக்கே சென்றனராம்…

கண்ணதாசன் ஒரு தீர்க்கதரிசி!…

இதையும் படிங்க: நான் எழுதின பாட்ட கண்ணதாசன்னு நினைச்சார் எம்.ஜி.ஆர்!. வாலி சொன்ன சீக்ரெட்!..

google news