அட்வான்ஸ் கொடுத்தும் செல்ஃப் எடுக்காத கமல் திரைப்படம்! அசால்ட்டா இறங்கி துவம்சம் செய்த ரேவதி
Actor Kamal: தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இன்று பல இளம் தலைமுறையினருக்கு ஒரு பாடமாக இருந்து வருபவர் உலக நாயகன் கமல்ஹாசன். 60 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாவில் பயணித்து வரும் கமலின் ஒவ்வொரு படங்களும் அடுத்த தலைமுறையினருக்கு ஒரு வரப்பிரசாதமாகவே பார்க்கப்படுகிறது.
எப்படி சிவாஜியின் படங்களை பார்த்து சினிமாவிற்கு வந்தார்களோ அதே போல் இன்றைய தலைமுறையினர் கமலின் படங்களை பார்த்து சினிமாவிற்கு வரத்தொடங்கியிருக்கிறார்கள். விதவிதமான கெட்டப்கள், விதவிதமான கதாபாத்திரங்கள் என காண்போரை ஒவ்வொரு முறையும் வியக்க வைத்துக் கொண்டிருக்கிறார் கமல்.
இதையும் படிங்க: இந்த எல்.சி.யூலாம் வேணாம்… நான் மட்டும் தான் இருக்கணும்.. லோகேஷிடம் கறார் காட்டிய ரஜினிகாந்த்!
சினிமாவில் இருக்கும் அத்தனை இயக்குனர்களுக்கும் நன்கு பரீட்சையப்பட்டவர் கமல். பாலசந்தர், பாரதிராஜா, பாலுமகேந்திரா, முத்துராமன் என பெரிய பெரிய ஜாம்பவான்களுடன் பயணித்த கமலுக்கு மிகவும் திருப்பு முனையை ஏற்படுத்திய படமாக 16 வயதினிலே திரைப்படம் அமைந்தது.
கமலை வைத்து மீண்டும் பாரதிராஜா ஒரு படத்தை எடுக்க நினைத்தார். ஏவிஎம் நிறுவனத்துடன் இணைந்து உருவாக இருந்த அந்தப் படத்திற்கு அட்வான்ஸ் தொகையையும் மெய்யப்பச் செட்டியார் பாரதிராஜாவுக்கு கொடுத்தும் விட்டாராம். ஆனால் ஏதோ ஒரு காரணத்திற்காக அந்தப் படம் தயாராகவே இல்லையாம்.
இதையும் படிங்க: நானும் விஜயும் சண்ட போடுறது புதுசு இல்ல… அவருக்கு என்கிட்ட இது பிடிக்காது… ஓபனாக சொன்ன எஸ்.ஏ.சி
அதனை அடுத்து ரேவதி , பாண்டியன் நடிக்க ஏவிஎம் நிறுவனத்துடன் பாரதிராஜா இணைந்து தயாரித்த படம்தான் புதுமைப்பெண். இந்தப் படம் எப்பேற்பட்ட தாக்கத்தை ஏற்படுத்தியது என அனைவரும் அறிந்த விஷயம்.
அடுப்படியிலேயே முடங்கி கிடக்கும் பெண்கள் எப்பேற்பட்ட வலிகளை அனுபவிக்கிறார்கள், அதிலிருந்து எப்படி வெளியே வரவேண்டும் என்பதை அந்தப் படத்தின் மூலம் உணர்ச்சி பொங்க சொல்லியிருப்பார் பாரதிராஜா. எல்லாவற்றையும் தாண்டி ரேவதியின் நடிப்பு அனைவரையும் மிரளவைத்தது.
இதையும் படிங்க: அஜித் நினைச்சிருந்தா பண்ணிருக்கலாம்… கிட்ட கூட உட்காரவிடல.. பாவா லெட்சுமணனின் உருக்கமான பதிவு…