கோபத்தில் மனோஜை அடித்த பாரதிராஜா… அப்போ நடந்தது என்ன?

bharathiraja manoj
bharathiraja
பாரதிராஜாவின் குடும்பத்தோடு நெருக்கமாக உள்ள எழுத்தாளர் கவிஞர் ஜோ மல்லூரி மனோஜ் குறித்தும் அவர்மீது அப்பா வைத்து இருந்த பாசம் குறித்தும் என்ன சொல்கிறார்னு பார்ப்போமா…
முதுமை, உடல்நிலை காரணமாக பாரதிராஜாவால் எழுந்துகூட நிற்க முடியவில்லை. மனோஜ் இறந்துட்டாருன்னு சொன்னதும் அவருக்கும் ஒண்ணும் புரியல. அப்படியே உட்கார்ந்துட்டாரு. 3 ஆண்டுகள் மனோஜ்தான் அப்பாவை நல்லா கவனிச்சிக்கிட்டு இருந்தாரு. அப்பாவுடன் சில முரண்பாடுகள், கருத்து வேறுபாடுகள், மோதல்கள், இணக்கம்னு எல்லாமே இருந்துருக்கு. 10 நாளைக்கு முன்னால தான் வால்வு இருதய மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
அது ஒரு கடினமான அறுவை சிகிச்சைதான். நான் சந்தோஷமாக இருக்கிறேன் என்றுதான் மதியம் வரை சொன்னார். அவருக்குக் கொஞ்சம் சுகரும் இருக்கு. மாலை ஒரு பிரஷர் வந்துவிட்டது. அதனாலதான் இறந்து போனார். அப்பாவை யார் சந்திக்க வேண்டும் என்றாலும் மனோஜிடம் அனுமதி வாங்கித்தான் போகணும். அந்தளவு மனோஜ் நல்லபடியாகக் கவனித்துக் கொண்டார். வாழ வேண்டிய வயதில் இப்படி ஒரு நிலைமை வரும்னு யாருமே எதிர்பார்க்கல. இன்னும் கொஞ்சம் மனோஜ் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம்.
பாரதிராஜா 2 ஆண்டுகள் மனோஜ் உடன் என்னதான் முரண்பட்டு இருந்தாலும் மனோஜ்தான் எல்லாமே பார்த்துக் கொண்டார். அந்தவகையில் மனோஜ் இடத்தை யாரும் பூர்த்தி பண்ண முடியாது. பொம்மலாட்டம் படம் கோவாவில் நடந்தது. நானும் கூடத்தான் இருந்தேன். எங்கிட்ட பாரதிராஜா சொன்னாரு. 'மனோஜைப் போன் பண்ணிக் கூப்பிட்டு வரச் சொல்லு. அவன் இருந்தா கொஞ்சம் ப்ரீயா இருக்கும்'னு சொன்னார் என்கிறார் ஜோ.மல்லூரி.
ஒருமுறை பாரதிராஜா தனக்கு முழு உடல் மருத்துவப் பரிசோதனை செய்யும்போது பாரதிராஜா மனோஜிக்கும் பாடி செக்கப் செய்யணும்னு சொன்னாராம். ஒரு முறை கோபத்துல பாரதிராஜா மனோஜை அடித்து விட்டாராம். ஆனாலும் அப்பாதானே அடிக்கிறார்னு மனோஜ் எதிர்ப்பு தெரிவிக்கவில்லையாம். ஆனால் அடித்ததும் பாரதிராஜா படுக்கையில் விழுந்து தேம்பித் தேம்பி அழுதாராம்.
அவருக்கு மனோஜ் பேரிழப்புன்னு சொல்ல முடியாது. அது ஈடு செய்ய முடியாத இழப்பு. நிறைய விஷயங்களில் பாரதிராஜா தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டார். அவருக்கு ஆறுதல் சொல்ல முடியாது என்கிறார் ஜோ. அதேபோல மனோஜ் நல்ல நடிக்கலன்னு சொல்ல முடியாது. படம் ஓடலை அவ்வளவுதான். குடும்ப அளவில் மனோஜ்-நந்தனா வெற்றிகரமான தம்பதியர்கள்தான் என்று சொல்லலாம்.
கலை விஷயத்துல மட்டும்தான் குறை. மனோஜ் இயக்குனர் ஆவதற்கும் முழு ஒத்துழைப்பும், சுதந்திரமும் கொடுத்தார் பாரதிராஜா. அப்படி உருவானதுதான் மார்கழித்திங்கள் படம். அதே போல சிகப்புரோஜாக்கள் படத்தை ரீமேக் செய்வதற்கும் ரொம்ப கஷ்டப்பட்டு அதற்குண்டான வேலைகளைச் செய்யத் தயாராக இருந்தாராம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.