மனோஜிக்கு 13 வயசிலேயே இருந்த நோய்… சித்தப்பா சொன்ன 'ஷாக்' நியூஸ்!

by sankaran v |   ( Updated:2025-04-04 05:37:31  )
manoj
X

manoj

சமீபத்தில் இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் தவப்புதல்வன் மனோஜ் இம்மண்ணை விட்டு மறைந்தார். இது திரையுலகிற்குப் பேரதிர்ச்சியை உண்டாக்கியது. மனோஜிக்கு உடலில் என்னதான் பிரச்சனை என்பது குறித்து இளையராஜாவின் தம்பி ஜெயராஜ் என்ன சொல்றாருன்னு பாருங்க.

. மனோஜிக்கு 13 வயசுல இருந்தே சுகர் இருந்தது. சமீபகாலமாக இன்சுலின் ஊசி போட்டது எங்களுக்கே தெரியாது. திடீர்னு மூளைக்குப் போற நரம்புல ஏதோ பிரச்சனைன்னு தெரிய வரும்போது டாக்டர் பைபாஸ் பண்ணிடலாம்னு சொல்லிருக்காரு. ஹார்ட்ல ஏதாவது பிரச்சனை இருந்தா பண்ணிடலாமேன்னு நான் நினைச்சேன்.

இதைப் பண்ணினா எல்லாமே கிளியர் ஆகிடும்னு டாக்டர் சொன்னாங்க. மனோஜ்கிட்ட பைபாஸ் பண்ணனுமான்னு கேட்டேன். அவனுக்கு குழந்தை எல்லாம் இருந்ததால கொஞ்சம் யோசிச்சான். அதுபற்றி பேசினதுக்கு அப்புறம் சரின்னுட்டான். பைபாஸ் பண்ணியதுக்கு அப்புறம் சரியாயிடுச்சு. நல்லாருக்குன்னு சொன்னாங்க.

மறுபடி 10 நாள் கழிச்சி செக்கப் பண்ணிய பிறகு சுகர் ஏதும் இருந்ததால வேறு ஏதும் பிரச்சனை இருக்கான்னு பார்த்தாங்க. அதுல ஒண்ணும் இல்ல. அப்படி இருந்தா டயாலிசிஸ் பண்ணிடலாம்னு பார்த்தாங்க. ஆனா அதுக்கு அவசியமே இல்ல. எல்லாம் சரியா இருக்குன்னுட்டாங்க. அதனால மனோஜ்க்கு ரொம்ப ஹேப்பியா இருந்தது. மறுநாள் எல்லாருக்கூடயும் பேசிக்கிட்டுதான் இருந்தான்.

bharathiraja jayarajதேனிக்குப் போகறது பத்தி எல்லாம் பேசினான். அப்புறம் டீ போட்டுக் கொண்டு வந்து கொடுக்கும்போது எனன்னனு தெரியல. என்னமோ பண்ணுதுன்னு நெஞ்சுல கையை வச்சான். அப்புறம் ஆ…ன்னு சொன்னான். அவ்ளோதான்… வாழவேண்டிய புள்ள. இப்படி போவான்னு நினைச்சிக்கூட பார்க்கல. கிட்டத்தட்ட 5 வருஷம் என் மார்புலதான் படுத்துத் தூங்குவான் என்று கனத்த இதயத்துடன் நெகிழ்ச்சியுடன் சொல்கிறார் ஜெயராஜ்.

சில காட்சிகள்ல படங்களில் நடிக்கும்போது ரொம்ப நுணுக்கமான நடிப்புத் திறமையை வெளிப்படுத்துவான். ஆனா ஏன் பெரிய அளவில் வரலன்னே தெரியல. மனோஜ்கிட்ட கொஞ்சம் மனம்விட்டு பேசி இருக்கலாமோன்னு உறுத்துது. பாரதிராஜாவை இன்னும் சமாதானப்படுத்த முடியல. புள்ள மேல அவ்ளோ பாசம் வச்சிருந்தாரு. அவருக்கே போட்டாவைப் பார்க்கும்போது மனோஜ் இருக்கான்னுதான் தோணுமே தவிர வேற எதுவும் தோணல என்று தர்மசங்கடத்துடன் சொல்கிறார் ஜெயராஜ்.

Next Story