1970 வரைக்கும் தமிழ் சினிமாவின் முறை என்பது ஒரே மாதிரியாகத்தான் இருந்தது. ஒரு படத்தை எடுத்துக் கொண்டால் அதில் நடிக்கும் ஹீரோ ஹீரோயின்கள் இப்படித்தான் இருக்க வேண்டும் என நல்ல அழகு, நல்ல உயரம், நல்ல உடல் என கதாநாயகர் கதாநாயகிக்கு உரித்தான ஒரு முறையை பின்பற்றி வந்தது. அதை முற்றிலும் தகர்த்தவர் இயக்குனர் சிகரம் பாரதிராஜா.
தமிழ் சினிமாவையே தலைகீழாக மாற்றிப் போட்ட படம்
முதல் படம் என்றாலும் தன் மனதில் நினைத்ததை அப்படியே தன் படத்தின் மூலம் கொண்டு வந்து அதில் பெரும் சாதனையையும் படைத்தார் பாரதிராஜா. 1977 16 வயதினிலே படம் ரிலீஸ் ஆன வருடம். அதற்கு முன்பு வரை கமலை ஒரு பிளேபாயாகவே பார்த்து ரசித்து வந்தனர் ரசிகர்கள். அந்தப் படம் வெளியாவதற்கு முன் ஏகப்பட்ட படங்களில் ஹீரோவாக நடித்த கமலை சுற்றி எப்பொழுதும் கல்லூரி பெண்களின் கண்கள் வட்டமிட்டு கொண்டே இருந்தன.

இதையும் படிங்க : வீடு தேடி வந்த ஹீரோ.. அவர் இல்லனா அரவிந்த்சாமி ரீ எண்ட்ரி ஆகியிருக்க முடியாது…
அப்படிப்பட்ட கமலை இந்தப் படத்தில் ஒரு அழுக்கான, வாய் நிறைய வெற்றிலையுடன் மூக்கில் ஒரு வளையமும் போட்டு கிராமத்தில் இருக்கும் ஒரு சாதாரண நபருக்கும் கீழான ஒரு தோற்றத்தில் பாரதிராஜா காட்டி இருப்பது அனைவருக்கும் ஒரு பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கமலுக்கு ஜோடியாக ஒரு அழகு மயிலாக கிராமத்து பெண்ணாக ஸ்ரீதேவி மயில் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். பரட்டை என்ற கதாபாத்திரத்தில் அப்போது வரை வில்லன் கதாபாத்திரத்தில் மிரட்டி வந்த ரஜினியே இந்தப் படத்திலும் வில்லனாக நடித்திருந்தார். ரஜினி, கமல் ,ஸ்ரீதேவி ஆகிய மூவரும் அந்தப் படத்தில் நடிக்கும் போதே மிகவும் வளர்ந்த நடிகர்களாக இருந்தனர். பாரதிராஜா மட்டும்தான் புது முக இயக்குனர்.
படத்திற்கு வந்த சோதனை
படத்தை எடுத்து ரிலீசுக்கு காத்திருக்கும் நேரத்தில் இந்த படத்தை வாங்க எந்த விநியோகஸ்தர்களும் முன்வரவில்லை. காரணம் கமலை அப்படி காட்டி இருப்பது. இருந்தாலும் பாரதிராஜா அதைப் பற்றி எதுவும் கவலை கொள்ளவில்லை இந்த படத்தை தயாரித்த ராஜக்கண்ணு, அவர்தான் இந்தப் படத்தை நானே தமிழ்நாடு முழுவதும் ரிலீஸ் செய்கிறேன் என சொந்த செலவில் ரிலீஸ் செய்து மாபெரும் வெற்றியும் கண்டார்.
இதையும் படிங்க : கில்லி விளையாடிய ஒல்லி நடிகர்!..சல்லி சல்லியாய் நொறுங்கிய ஆங்கரின் வாழ்க்கை!..
இப்படி தமிழ் சினிமாவில் ஒரு புதுமுக இயக்குனராக உதயமானார் பாரதிராஜா. இந்தப் படத்தில் மற்றும் ஒரு விஷயத்தை கவனிக்க வேண்டியதாகிறது. இதுவரை யாரும் செய்யாத ஒன்றை பாரதிராஜா இந்த படத்தின் மூலம் செய்து காட்டியிருக்கிறார். எந்த நடிகர் நடிகைகளுக்கும் இருக்கும் ஆசை டைட்டில் கார்டில் எப்பொழுது நம் பெயர் வரும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருப்பது.

டைட்டில் கார்டில் இப்படி ஒரு புதுமையா?
ஆனால் இந்த 16 வயதினிலே படத்தில் டைட்டில் கார்டில் கமலை அறிமுகம் செய்யும்போது சப்பானி என்றும் ஸ்ரீதேவியை மயில் என்றும் ரஜினியை பரட்டை என்றும் காந்திமதியை குருவம்மாள் என்றுமே பெயர் போட்டு அறிமுகம் செய்திருப்பார் பாரதிராஜா. இதற்கு வேறு எந்த நடிகர்களும் சம்மதிக்க மாட்டார்கள் ஆனால் இவர்கள் எப்படி சம்மதித்தார்கள் என்று தெரியவில்லை. அதையும் மீறி எந்த இயக்குனரும் செய்யத் துணியாத ஒரு விஷயத்தை இதன் மூலம் செய்து காட்டி இருக்கிறார் பாரதிராஜா. இதை பிரபல எழுத்தாளர் ஆன சுரா ஒரு பேட்டியின் மூலம் கூறினார்.
