பாரதிராஜா படங்களில் எது ஹிட், எது பிளாப்? ரஜினிக்கே பிளாப் கொடுத்துட்டாரே!

rajni bharathiraja
இயக்குனர் பாரதிராஜா டைரக்ட் பண்ணிய படங்களில் வெற்றி, தோல்வி பற்றி பார்ப்போம்.
1977ல் பதினாறு வயதினிலே படம் ரிலீஸ் ஆனது. இதில் கமல், ஸ்ரீதேவி, ரஜினி, கவுண்டமணி உள்பட பலர் நடித்துள்ளனர். இது பிளாக்பஸ்டர் ஹிட். 1978ல் கிழக்கே போகும் ரயில். சுதாகர், ராதிகா நடித்துள்ளனர். அடுத்து சிகப்பு ரோஜாக்கள். கமல், ஸ்ரீதேவி நடித்துள்ள த்ரில்லர் படம். இரண்டுமே ஹிட்.
1979ல் புதிய வார்ப்புகள், நிறம் மாறாதப் பூக்கள் என இரு படங்கள் வந்தன. பாக்கியராஜ் ஹீரோவாக அறிமுகமான படம் புதிய வார்ப்புகள். சூப்பர்ஹிட். அடுத்து வந்த நிறம் மாறாத பூக்கள் சுதாகர், ராதிகா நடித்தனர். இதுவும் சூப்பர் ஹிட்.
1980ல் நிழல்கள் படம் ரிலீஸ். மணிவண்ணன் கதை எழுதிய படம். இது தோல்வி. அதே நேரம் மணிவண்ணன் மீது மீண்டும் நம்பிக்கை வைத்து அவரைக் கதை எழுதச் சொன்னார். அதுதான் பாரதிராஜாவின் இயக்கத்தில் 1981ல் அலைகள் ஓய்வதில்லை படமாக வந்தது. கார்த்திக், ராதா இருவரும் நடித்து ஹிட். அடுத்து டிக் டிக் டிக். இது கமல் நடித்துள்ள படம். சூப்பர்ஹிட்.
1982ல் காதல் ஓவியம், வாலிபமே வா வா என இரு படங்கள். இரண்டுமே பிளாப். 1983ல் மண்வாசனை படம். பாண்டியன், ரேவதி அறிமுகமானார்கள். படம் பிளாக்பஸ்டர் ஹிட். 1984ல் புதுமைப்பெண். இது பாண்டியன், ரேவதி நடித்த படம். லேட் பிக்கப். 1985ல் ஒரு கைதியின் டைரி, முதல் மரியாதை என இரு படங்கள் ரிலீஸ். கமல் படமும், சிவாஜி படமும் சூப்பர்ஹிட்.
1986ல் சத்யராஜ், ரேகா நடித்த படம் கடலோரக்கவிதைகள். இதுவும் ஹிட். 1987ல் வேதம்புதிது. சத்யராஜ் நடித்த இந்தப் படம் சூப்பர்ஹிட். 1988ல் கொடிபறக்குது. ரஜினியின் இந்தப் படம் பிளாப். 16 வயதினிலே படத்துக்குப் பிறகு பாரதிராஜாவின் இயக்கத்தில் ரஜினி நடித்த படம் இதுதான். 1990ல் என்னுயிர் தோழன் பிளாப். 1991ல் புதுநெல்லு புதுநாத்து நெப்போலியன், சுகன்யா உள்பட 6 பேர் அறிமுகமாயினர். படம் சூப்பர்ஹிட். 1992ல் கார்த்திக், ரஞ்சிதா நடித்த படம் நாடோடித் தென்றல். ரஞ்சிதா அறிமுகம். படம் சூப்பர்ஹிட்.
1993ல் கேப்டன் மகள், கிழக்கு சீமையிலே படம். இதுல கேப்டன் மகள் பிளாப். கிழக்கு சீமையிலே சூப்பர்ஹிட். இதுல ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்துள்ளார். 1994ல் வெளியான படம் கருத்தம்மா. ராஜா, ராஜஸ்ரீ, மகேஸ்வரி நடித்த படம். சூப்பர்ஹிட் ஆனது. 1995ல் சிவாஜி, பிரபு நடித்த பசும்பொன் ரிலீஸ். ஆவரேஜ் ஹிட்.
1996ல் விஜயகாந்த் நடித்த தமிழ்செல்வன் ரிலீஸ். இது கலவையான விமர்சனங்களை சந்தித்தது. படம் பிளாப். அதே ஆண்டில் வந்த மற்றொரு படம் அந்திமந்தாரை. விஜயகுமார் ஹீரோ. ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்துள்ளார். இந்தப்படம் பிளாப். 1999ல் தாஜ்மகால் படம் பிளாப். 2001ல் வெளியான படம் கடல் பூக்கள். இதுவும் பிளாப்.
அடுத்து மனோஜை வைத்து இயக்கிய ஈரநிலம் படமும் பிளாப். கண்களால் கைது செய் படமும் பிளாப். 2008ல் பொம்மலாட்டம் வந்தது. அதுவும் பிளாப். 2013ல் அன்னக்கொடியும், கொடிவீரனும் படம். அதுவும் பிளாப். 2020ல் மீண்டும் மரியாதை படம். அதுவும் பிளாப்.