பெண்ணுடன் இருப்பதே தனி சுகம்தான்! பாரதிராஜாவுக்கு இருந்த ஒரே கெட்டப்பழக்கம் இதுதானாம்

Director Bharathiraja: தமிழ் சினிமாவில் இயக்குனர் இமயம் என போற்றப்படுபவர் இயக்குனர் பாரதிராஜா. தமிழ் சினிமாவை மடை மாற்றிய இயக்குனர்களில் பாரதிராஜாவும் ஒருவர். 1977 ஆம் ஆண்டு ‘16வயதினிலே’ என்ற படத்தின் மூலம் முதன் முதலில் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். இந்தப் படத்திற்கு பிறகு கிராமத்து பின்னனியில் அமைந்த படங்களை அதிகமாக எடுக்க தொடங்கினார் பாரதிராஜா.

தமிழ் சினிமாவில் தன் பெயரை ஆழமாக பதிவு செய்ததோடு தயாரிப்பாளராகவும், நடிகராகவும் இன்றளவும் ஜொலித்துக் கொண்டிருக்கிறார்.பாசத்திற்குரிய உங்கள் பாரதிராஜா என ஒவ்வொரு முறையும் மேடையில் பேச ஆரம்பிக்கும் போதும் ரசிகர்களின் கைத்தட்டல்களுக்கு அளவே இல்லை என்றுதான் சொல்லவேண்டும்.

இதையும் படிங்க: விஜயிற்கு கதை சொல்ல போய் பல்ப் வாங்கி வந்த முன்னணி நடிகர்… என்னங்க இப்படி ஆகிப்போச்சு!

இயக்குனராக எண்ணற்ற படங்களை எடுத்த பாரதிராஜா கல்லுக்குள் ஈரம் என்ற படத்தின் மூலம் முழு நீள நடிகராக பாரதிராஜா நடிகராக அறிமுகமானார். அதனை தொடர்ந்து மணி ரத்னம் இயக்கிய ஆய்த எழுத்து படத்தில் நடித்தார். தொடர்ந்து பாண்டிய நாடு, குரங்கு பொம்மை, எங்க வீட்டுப் பிள்ளை, திருச்சிற்றம்பலம் என தற்போது வரை சினிமாவிலேயே தன் வாழ் நாள் முழுவதையும் கழித்து வருகிறார் பாரதிராஜா.

இந்த நிலையில் பாரதிராஜாவுக்கு ஒரு கெட்டப்பழக்கம் இருந்ததையும் அது என்ன பழக்கம் என்பதை பற்றியும் ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். நிருபர் கேட்ட கேள்விக்கு பதில் அளித்த பாரதிராஜா எனக்கு இருந்த ஒரே கெட்டப்பழக்கம் மது குடிப்பதுதான். காலையில் 9 மணிக்கு ஆரம்பித்து மதியம் 12 மணி வரை திரும்பவும் 3 மணியில் இருந்து ஆரம்பித்து இரவு வரை என வாழ் நாள் முழுவதும் குடியிலேயே இருந்தேன் என்று கூறியிருந்தார்.

இதையும் படிங்க: புது டெக்னிக்கை கையில் எடுத்த விஜய் சேதுபதி.. கைவிட்டு போன பெரிய வாய்ப்பு

கோபம் அதிகமாகும் போதும், யாராவது என்னை ஏமாற்றி விட்டார்கள் என்று தெரிந்தாலோ உடனே குடிக்க ஆரம்பித்து விடுவேன். பெண்ணுடன் இருக்கும் போதும் குடிப்பேன். அப்போது இருக்கும் சுகமே வேற. ஆனால் அதை எல்லாவற்றையும் இப்போது நான் தியாகம் செய்து விட்டேன். கிட்டத்தட்ட ஒருவருடம் ஆகிவிட்டது குடியை நிறுத்தி. இந்த வாழ்க்கையும் எனக்கு பிடித்து விட்டது.

ஆனால் கோபம் வரும் போது மறுபடியும் குடிக்க விட்ராதீங்கடா என்று சுற்றி இருப்பவர்களை அவ்வப்போது எச்சரித்துக் கொண்டே இருப்பாராம் பாரதிராஜா.

இதையும் படிங்க: கவுண்டமணியையே அழ வைத்த இயக்குனர்… டகால்டிக்கே டகால்டியா?.. அப்படி என்னதான் நடந்தது?..

 

Related Articles

Next Story