பாரதிராஜாக்கிட்ட வச்சிக்கிட்டா அவ்ளோதான்.. கன்னம் சிவக்க அடி வாங்கிய உதவி இயக்குனர்!..

தமிழில் உள்ள பெரும் இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் பாரதிராஜா. பாரதிராஜா இயக்கும் திரைப்படங்கள் பெரும்பாலும் கிராமத்தை சார்ந்த கதையாகவே இருக்கும். கிராம புறங்களில் நடக்கும் விஷயங்களை விறுவிறுப்பான் கதைகளாக மாற்றி படம் எடுப்பதால்தான் பாரதிராஜாவிற்கு தனி புகழ் இருந்தது.
உதாரணத்திற்கு அவரது முதல் படமான 16 வயதினிலே திரைப்படத்தில் கதை என பார்த்தால் பெரிதாக ஒன்றும் இருக்காது. ஆனால் திரைக்கதையில் சிறப்பாக பணிப்புரிந்திருப்பார் பாரதிராஜா. இந்த தனித்திறமையே பாரதிராஜாவை பெரும் இயக்குனர் ஆக்கியது.

bharathiaja
இதையும் படிங்க:மந்திரக்கட்டா? கேட்கவே பயங்கரமா இருக்கு! சினிமாவில் மனோரமா சிம்மாசனம் போட்டு உட்கார இதுதான் காரணமா?
1965களிலேயே சினிமாவில் வாய்ப்பு தேடி வந்துவிட்டார் பாரதிராஜா. உதவி இயக்குனராகி பிறகு இயக்குனராக ஒரு படமாவது இயக்கி விட வேண்டும் என்பது அவரது ஆசையாக இருந்தது. இந்த நிலையில் இயக்குனர் எஸ்.ஆர் புட்டனாவிடம் உதவி இயக்குனராக சேருவதற்கு பாரதிராஜாவிற்கு வாய்ப்பு கிடைத்தது.
பாரதிராஜாவில் அடிவாங்கிய அசோசியேட்:
இருளும், ஒளியும் என்கிற திரைப்படத்தில் உதவி இயக்குனராக சேர்ந்தார் பாரதிராஜா. ஆனால் அங்கு ஏற்கனவே இருந்த உதவி இயக்குனர்கள் பாரதிராஜாவை எந்த வேலையும் செய்ய விடவில்லை. ஒருமுறை அவுட்டோர் படப்பிடிப்பிற்கு கிளம்பும்போது பாரதிராஜாவிடம் வந்த அசோசியோட் இயக்குனர் 25 ரூபாய் கொடுத்தால்தான் படப்பிடிப்பிற்கு அழைத்து செல்வேன் என கூறியுள்ளார்.

Irulum_Oliyum
இதையும் படிங்க:ப்ளீஸ்!..விஜய் மனசு உடைஞ்சி போயிடுவான்!.. அதமட்டும் சொல்லிடாதீங்க!. லியோனியிடம் கெஞ்சிய எஸ்.ஏ.சி…
உடனே பாரதிராஜா. அவ்வளவு ரூபாய் இல்லை என கூறியுள்ளார். இதனால் பாரதிராஜாவை விட்டு சென்றுள்ளார் அசோசியேட் இயக்குனர். இந்த நிலையில் மறுநாள் படப்பிடிப்பு தளத்திற்கு வந்த இயக்குனர் “என்னையா அவுட்டோர் ஷூட்டுக்கெல்லாம் வரமாட்டியா” என சத்தம் போட்டுள்ளார்.
அப்போதுதான் பாரதிராஜா அசோசியேட் காசு கேட்ட விவரத்தை கூறியுள்ளார். உடனே கடுப்பான இயக்குனர் அசோசியேட்டை அடித்து துவைத்துள்ளார். அதன் பிறகு படப்பிடிப்பு குழுவே பாரதிராஜாவிடம் சற்று அடக்க ஒடுக்கமாகவே இருந்துள்ளனர். இந்த நிகழ்வை தனது பேட்டியில் அவர் பகிர்ந்திருந்தார்.
இதையும் படிங்க:அந்த மாதிரி எந்த ஹீரோவும் செய்யமாட்டான்!.. இம்பாசிபிள்!. கமலை பாராட்டி தள்ளிய பாரதிராஜா…