நடிகைக்கு மிஸ்ஸான பாராட்டு..! ஸ்கெட்ச் போட்டு அலேக்கா தூக்கிய பாரதிராஜா…!

bharathiraja
Bharathiraja: பாரதிராஜாவின் அறிமுகத்தில் முக்கியமான நடிகை ராதா. அலைகள் ஓய்வதில்லை படம் வந்த சமயத்தில் தமிழ் சினிமா ரசிகர்கள் அவரை ஒரு கவர்ச்சி கன்னியாகத்தான் பார்த்தார்கள். ஆனால் அதைத் தாண்டி அவருக்குள் மிகச்சிறந்த நடிப்புத்திறன் இருப்பதை அலைகள் ஓய்வதில்லை படப்பிடிப்பின் போதே நான் உணர்ந்து கொண்டேன்.
ஆனால் நான் எதிர்பார்த்ததைப் போல நல்ல நல்ல கதாபாத்திரங்கள் ராதாவுக்கு அமையல. அதுக்கு இன்னொரு முக்கியமான காரணம் என்னன்னா தமிழ்த் திரைப்படங்களை விட அதிகமாக அவர் தெலுங்கில் நடிக்கத் தொடங்கியதுதான். அவர் நடிப்புத்திறன் ரசிகர்களைப் போய்ச் சேரலையே என்ற எண்ணம் எனக்குள்ளே இருந்தது.

அதை நிச்சயமாகக் காதல் ஓவியம் திரைப்படம் செய்யும் என்று நான் நம்பினேன். அந்தப் படத்திலே ராதா அப்படிப்பட்ட ஒரு அற்புதமான நடிப்பை வழங்கினார். அந்தப் படம் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெறவில்லை. பொதுமக்கள் அந்தப் படத்தை ஏற்றுக்கொள்ளவில்லை என்றாலும் பத்திரிகை விமர்சகர்கள் பாராட்டி எழுதுவாங்கன்னு நான் நினைச்சேன்.
ஆனால் நான் நினைத்த அளவுக்கு ராதாவுடைய நடிப்புக்கு அந்தப் படத்தில் மிகப்பெரிய பாராட்டு கிடைக்கவில்லை. அது என் மனதுக்கு மிகப்பெரிய வருத்தமாக இருந்தது. அதன்காரணமாகத்தான் முதல் மரியாதைப் படத்திலே அவரை நடிக்க வைத்தேன்.
காதல் ஓவியம் படத்திற்கு எப்படிப்பட்ட பாராட்டுக்கள் ராதாவுக்குக் கிடைக்கணும்னு நான் நினைச்சேனோ அந்த பாராட்டுக்கள் முதல் மரியாதை படத்திலே ராதாவுக்குக் கிடைச்சது. இது எனக்கு அளவில்லாத மகிழ்ச்சி என்று பத்திரிகை பேட்டி ஒன்றில் பாரதிராஜா பதிவு செய்துள்ளார்.