More
Categories: Cinema History Cinema News latest news

3 படம் ஹிட் கொடுத்தேன்.. ஆனாலும் சரண் அப்படி செய்தார்!.. ஃபீல் பண்ணி பேசும் பரத்வாஜ்!..

இசை அமைப்பாளர் பரத்வாஜ் தனது சினிமா உலக அனுபவங்கள் மற்றும் இயக்குனர் சரண் உடனான சம்பவங்கள் குறித்தும் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

வசூல் ராஜா எம்பிபிஎஸ் படத்தின் இசை அமைப்பாளர் பரத்வாஜ். இந்தப் படத்துக்கு பாடல் கம்போஸ் கமல் வீட்டில் வைத்து நடந்தது. தினமும் ஒரு பாடலுக்கு கம்போஸ் பண்ணிடுவேன். நீங்க ஏழு குதிரை ஸ்பீடுல இசை அமைக்கிறீங்கன்னு கமல் சாரே பாராட்டினாரு. பாடல் வரிகளுக்கு நான் முக்கியத்துவம் கொடுப்பேன்.

Advertising
Advertising

சின்ன தவறு வந்தால் கூட நான் விட மாட்டேன். பாடகர்களும் வரும்போது ரொம்ப பிரிப்பேர்டா தான் வருவாங்க. இவன் கிட்ட போனா கொன்னுடுவான்னு சொல்வாங்க. பாடலோட வரிகள் மக்கள் மத்தியில் போய்ச் சேரணும் அப்படிங்கறதுல நான் ரொம்பவே கவனம் செலுத்துவேன் என்கிறார் பரத்வாஜ்.

ஜெமினி படத்துல தீவானா பாடலுக்கு 60 வயலின் போட்டு அதிகமா கருவிகளை வைத்து இசை அமைத்தேன். ஆனா அந்தப் பாட்டு எனக்குப் பிடிக்கலன்னு சரண் சொல்லிட்டாரு. கொஞ்சம் சிம்பிளா போட்டுக் கொடுங்கன்னு அவர் கேட்க மறுபடியும் மாத்தி இசையமைத்தேன்.

ஜெமினிபடத்துக்கு முதல்ல யார் வேணாலும் இருக்கட்டும். பரத்வாஜ் வேண்டாம்னு சரண் சொன்னாங்க. ஆனா அவரு அதுக்கு அப்புறம் தெரியாம என்னோட பேரை சொல்லிருக்காருங்கறது தெரிஞ்சது. அப்புறம் நான் தான் மியூசிக் டைரக்டர்னு முடிவு பண்ணினாங்க. பாரதிராஜாவோட மகன் மனோஜ் நடித்த படத்துக்கு சரண் தான் டைரக்ட் பண்ணினார். அப்போ அவர் என்னை விட்டுட்டு ஏ.ஆர்.ரகுமான்கிட்ட போனாரு.

இதையும் படிங்க… விடாமுயற்சிக்கு விடுமுறை! இத செய்ய தவறிட்டாரே அஜித்? பொங்கி எழும் பிரபலம்

எனக்கு கொஞ்சம் கஷ்டமா இருந்தது. நான் 3 படம் ஹிட் கொடுத்துருக்கேன். ஏன் இப்படி பண்ணினாருன்னு நினைச்சேன் என்கிறார் இசை அமைப்பாளர் பரத்வாஜ். சரண் இயக்கத்தில் மனோஜ் நடிக்க, ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்த படம் அல்லி அர்ஜூனா என்பது குறிப்பிடத்தக்கது. இது 2002ல் வெளியானது. காதல் மன்னன், அமர்க்களம், பார்த்தேன் ரசித்தேன், ஜே ஜே ஆகிய படங்கள் சரண் இயக்கத்தில் வந்தன. பரத்வாஜ் தான் இசை அமைத்தார்.

Published by
sankaran v

Recent Posts