Categories: Cinema History

10 ஆயிரம் கேட்டா 20 ஆயிரம் தருவாரு!.. காமெடி நடிகரை புகழ்ந்த பாவா லட்சுமணன்… யாருப்பா அந்த வள்ளல்..?

பாவா லட்சுமணன் சந்தானம் குறித்தும், அவர் செய்த உதவி குறித்தும் பேட்டி ஒன்றில் பேசியிருக்கின்றார்.

தமிழ் சினிமாவில் பிரபல காமெடி நடிகராக வலம் வந்தவர் பாவா லட்சுமணன். வடிவேலு காமினேஷனில் பல படங்களில் நடித்து அசதி இருக்கின்றார். தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களின் படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்து அசதி இருக்கின்றார். அதிலும் சரத்குமாரின் மாயி திரைப்படத்தில் ‘வாமா மின்னல்’ என்ற டயலாக் இன்றளவும் ஃபேமஸ் ஆக இருந்து வருகின்றது.

கடந்த சில ஆண்டுகளாக எந்த ஒரு திரைப்படங்களிலும் இவரை பெரிய அளவில் பார்க்க முடியவில்லை. அது மட்டும் இல்லாமல் சமீபத்தில் சர்க்கரை நோய் அதிகமான காரணத்தினால் கால் கட்டை விரலை அகற்றும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டார் பாவா லட்சுமணன். அப்போது உதவி கேட்டு வீடியோ வெளியிட்டு இருந்தார். இதை பார்த்த பலரும் இவருக்கு உதவி செய்திருந்தார்கள்.

பின்னர் உடல்நலம் தேறி பல youtube சேனலுக்கு பேட்டி கொடுத்து வந்தார். இவர் வடிவேலு குறித்து பல விஷயங்களை பகிர்ந்திருந்தார். தான் வளர்ந்து வந்த காலகட்டத்தில் தன்னுடன் இருந்த பல காமெடி நடிகர்களை அவர் கண்டு கொள்வதே கிடையாது. அவர்கள் கஷ்டப்பட்டால் கூட அவர்களுக்கு உதவி செய்வது கிடையாது. வடிவேலுவை நாம் ஒரு காமெடி நடிகராக பார்த்திருக்கிறோம். ஆனால் கேமராவுக்கு பின்னால் அவர் நடந்து கொள்வதே வேறு..

வடிவேலு தன்னுடன் நடிக்கும் சக காமெடி நடிகர்கள் யாரையும் வளர விடமாட்டார். தன்னை மீறி தனித்துவமாக யாராவது நடித்து விட்டால் போதும் அவரை எப்படியாவது கட்டம் கட்டி கீழே இறக்கும் வேளையில் இறங்கி விடுவார். மேலும் அவர்களை அடுத்த எந்த திரைப்படத்திலும் நடிக்கவிடாமல் செய்துவிடுவார் என பல அதிர்ச்சி தகவலை கூறியிருந்தார். இதைத்தொடர்ந்து பேசிய அவர் சந்தானம் குறித்தும் சில விஷயங்களை பகிர்ந்திருந்தார்.

சந்தானம் ஒரு மிகச் சிறந்த மனிதர் அவர் காமெடி கதாபாத்திரங்களில் நடித்துக் கொண்டிருந்தபோது ட்ராக் எழுதுவதற்காக சில நபர்களை கூட வைத்திருந்தார். அவர்களுக்கு சம்பளமும் கொடுத்து வந்தார். தற்போது அவர் ஹீரோ ஆன பிறகும் அவர்களுக்கு சம்பளம் கொடுத்து வருகின்றார். கொரோனா காலகட்டத்தில் எல்லாம் வேலையே இல்லாத சமயத்திலும் கூட அவர் சம்பளம் கொடுத்து வந்தார்.

அவரிடம் மொத்தம் ஐந்து பேர் இருக்கிறார்கள், அதில் ஒருவருக்கு 5 லட்சம் சம்பளம், மற்றொருவருக்கு மூன்று லட்சம், இரண்டு லட்சம் கடைசியாக ஒருவருக்கு 50,000 வரை சம்பளம் கொடுத்து வருகின்றார். ஒருமுறை நான் அவரிடம் உதவியாக பத்தாயிரம் ரூபாய் கேட்டேன் ஆனால் அவர் எனக்கு 20,000 ரூபாயை கொடுத்தார். அவ்வளவு பெரிய நல்ல மனிதர் சந்தானம் என்று மிகப் பெருமையாக பேசி இருந்தார். இவர் கலகலப்பு திரைப்படத்தில் சந்தானத்துடன் இணைந்து நடித்திருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

ramya suresh

Recent Posts

சிறகடிக்க ஆசை தொடரில் இருந்து வெளியேறுகிறாரா மீனா? வரும் வாரம் நடக்க இருப்பது என்ன?

Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரில் இந்த வாரம் நடக்க இருக்கும் எபிசோட் குறித்த…

2 hours ago

என்னது அனிதா சம்பத் டாக்டர் ஆகிட்டாங்களா? இது எப்போ நடந்துச்சு!!

Anitha Sampath: செய்தி வாசிப்பாளராக இருந்த அனிதா சம்பத் தற்போது சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வருகிறார். இவர் தற்போது…

4 hours ago

திமுக மீது அப்படி என்ன கோபம்? ஒருவரை ஒப்பிட்டுக் கேட்பது மட்டுமே தகுதியா? – விஜய்க்கு இயக்குநர் சேரன் சரமாரி கேள்வி!

தமிழக அரசியல் களம் தற்போது பரபரபான கட்டத்தை எட்டியுள்ளது. தேர்தல் நெருங்கி வருவதால் அரசியல கட்சிகள் பரப்புரையில் பிஸியாக இருந்து…

5 hours ago

Cook with comali 7: ஆடம்பரமாக தொடங்கிய முதல் எபிசோட்… இந்த முறை என்ன ஸ்பெஷல்… போட்டியாளர்கள் இவர்கள் தானா?

Cook with comali 7: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கும் குக் வித் கோமாளி சீசன் 7 நிகழ்ச்சியின் முதல்…

7 hours ago

Kaalidas 2 Box Office: காளிதாஸ் 2 முதல் நாள் வசூல்: விரக்தியில் படக்குழு

தமிழ் சினிமாவில் திறமையான நடிகர்களில் பரத் முக்கியம்ானவர். இவர் நடிப்பில் காதல் , 'வெயில்', எம்டன் மகன், 555, காளிதாஸ்,…

10 hours ago

மீண்டும் மிரட்ட வரும் அருள்நிதி: முடிவடைந்த டிமான்ட்டி காலனி 3 படப்பிடிப்பு!

தமிழ் சினிமாவில் ஹாரர் திரைப்படங்களுக்கு எப்போதுமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில், பேய்ப் பட ரசிகர்களை சீட்…

22 hours ago