Cinema News
அட்ஜெட்ஸ் பண்றதுல என்ன தப்பு?.. பேட்டி கொடுத்து வாய்ப்புகளை அள்ளிய பூனைக்கண் புவனேஸ்வரி!..
ஆந்திராவை சேந்தவர் புவனேஸ்வரி. ரசிகர்கள் இவரை பூனைக்கண் புவனேஸ்வரி என அழைப்பார்கள். பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார். தமிழ் சினிமாவில் நடித்து ரசிகர்களை சூடாக்கிய நடிகைகளில் இவரும் ஒருவர். இவருக்கென ஒரு ரசிகர் கூட்டமும் இருந்தது. அதில் பெரும்பாலனவர்கள் காஜி ரசிகர்கள் என்பது சொல்லி தெரிய வேண்டியது இல்லை.
கந்தா கடம்பா கதிவேலா என்கிற படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கினார். அதன்பின், பல திரைப்படங்களிலும் சின்ன சின்ன வேடங்களில் நடித்திருக்கிறார். பெரும்பாலும் கிளுகிளுப்பு காட்சிகளில் நடித்திருப்பார். குறிப்பாக, ஷங்கர் இயக்கிய பாய்ஸ் படத்தில் விலைமாதுவாக வந்து ரசிகர்களை சூடாக்கினார்.
இதையும் படிங்க: கில்லி படத்த கொண்டாடுற நீங்க இத மறந்துட்டீங்களே! ஓட்டேரியா நடிச்சாலும் இப்படி ஒரு வருத்தமா
அந்த காட்சியில் அவரை பார்த்த ரசிகர்கள் சூடானார்கள். இந்த ஒரு காட்சியாலேயே இப்படத்தை ‘சீ’’ என விமர்சனம் செய்திருந்தது ஆனந்த விகடன் நாளிதழ். தமிழ் மற்றும் தெலுங்கில் மாறி மாறி நடித்திருக்கிறார். விவேக்குடன் பல படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் இவர்.
இவர் நடிப்பில் தமிழில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் ‘மனசே மவுனமா’. அதன்பின் அவர் தமிழ் படங்களில் நடிக்கவில்லை. ஆனால், தெலுங்கில் தொடர்ந்து நடித்து வந்தார். சென்னையில் ஒருமுறை வீட்டிலேயே விபச்சாரம் செய்ததாக போலீசார் இவரை கைது செய்தனர். ஆனால், அதை மறுத்தார் புவனேஸ்வரி.
இதையும் படிங்க: இசையா? வரிகளா? எது பெரியது? வைரமுத்து – இளையராஜா சொல்வது என்ன? அனிருத் திருந்துவாரா?..
இந்நிலையில், ஒரு பத்திரிக்கையாளர் ஊடகம் ஒன்றில் பேசியபோது ‘கைது விவகாரம் பரபரப்பாக பேசப்பட்ட போது என்னை அழைத்து ‘சார் என்னை ஒரு பேட்டி எடுங்க.. சர்ச்சையா இருந்தாலும் பரவாயில்லை. இதனால் எனக்கு சினிமா சான்ஸ் வரணும்’ என சொன்னார். அந்த பேட்டியில் ‘அட்ஜெஸ்ட் பண்ணா என்ன தப்பு?’ என பேசியிருந்தார். அதையே தலைப்பாக வைத்து பேட்டியை வெளியிட்டேன்.
அந்த பேட்டிக்கு பின் பலரும் அவரை தேடி சென்றார்கள். பல சீரியல்களிலும் நடிக்க அவருக்கு வாய்ப்பு வந்தது’ என சொல்லி இருந்தார். சித்தி, சொர்கம், ராஜ ராஜேஸ்வரி, தெற்கத்தி பொண்ணு, சந்திரலேகா, ஒரு கை ஓசை, பாசமலர் ஆகிய சீரியல்களில் புவனேஸ்வரி நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.