Connect with us

Cinema News

இது திகில் படம்தான்!. ஆனா வேற வேற லெவல்!.. ‘தி வில்லேஜ்’ பட அனுபவம் பேசி அதிரவைக்கும் ஆர்யா…

நெற்றிக்கண் படத்தை இயக்கியவர் மிலிந்த் ராவ். தற்போது ஆர்யாவின் நடிப்பில் இவர் இயக்கிய திகில் படம் தி வில்லேஜ். தமிழில் வெளியாகி உள்ள முதல் கிராபிக்ஸ் நாவல் இது. வெப்சீரீஸாக வெளியாகிறது.

ஆர்யாவுடன் இணைந்து திவ்யா பிள்ளை, ஆடுகளம் நரேன், தலைவாசல் விஜய், முத்துக்குமார், ஜான் கொகேன் உள்பட பலர் நடித்துள்ளனர்.அமேசான் பிரைமில் வரும் நவம்பர் 24ல் வெளியாகிறது. முழுக்க முழுக்க ரத்தத்தை உறைய வைக்கும் அதிபயங்கர திகில் படமாக வந்துள்ளது. அடர்ந்த காடுகளையும் அவ்வப்போது காட்டுகிறார்கள்.

படத்தின் டிரெய்லரைப் பார்க்கும்போது திடீர் திடீர் என பேயைக் காட்டுகிறார்கள். இந்தப் படத்தில் நடித்ததைப் பற்றி ஆர்யா இவ்வாறு சொல்கிறார்.

சில படங்கள் நல்லா ஓடினால் தான் வெற்றி விழா நடத்தி பார்ட்டி வைப்பார்கள். ஆனால் இந்தப் படத்தின் சூட்டிங் முடிஞ்சதுக்கே சக்சஸ் பார்ட்டி வைக்கணும். ஏன்னா நாலு வருஷமா எடுத்துக்கிட்டு இருக்குற படம். தினமும் 20 மணி நேரம் சூட்டிங்.

படத்துக்காக பிராஸ்தடிக் மேக் அப் போட்டுருப்போம். 4 மணி நேரம் ஆகும். அதை கழட்டவே முடியாது. அர்ஜென்ட்டா பாத்ரூம் போகணும்னு கேட்டா கூட விடமாட்டாங்க. ஒரு 3 மணி நேரம் போகட்டும்னு சொல்வாங்க.

The village

அவனே அர்ஜென்ட்னு தான் கேட்டு வாரான். அதுக்குப் போயி 3 மணி நேரம் போகட்டும்னு சொன்னா அவனும் ம்… சரின்னு தலையை ஆட்டிக்கிட்டே போயிடுவான்.

நான் மிலிந்த் சொன்னது ஒண்ணு தான். இந்தப்படத்தைப் பொறுத்தவரை 60 முதல் 70 சதவீதம் சொன்ன மாதிரி சக்சஸா செஞ்சாலே போதும். படம் கண்டிப்பா வெற்றி அடைஞ்சிரும்.

படத்தில விஷூவலா ரொம்ப வேலை செஞ்சிருக்காங்க. கிராபிக்ஸ் நல்லா வந்துருக்கு. இப்ப உள்ள ஆடியன்ஸ்க்கு தலை வெட்டி கீழ விழுறது, ரொம்ப பிளட், கைகால்ல வெட்டுறதுன்னு அந்த மாதிரி ஆடியன்ஸ் இப்ப இருக்காங்க.

இது வந்து சுவிட்சர்லாந்து, லண்டன்னுலாம் இல்லாம நம்ம ஊர்ல தூத்துக்குடில நடக்குது. அதுக்கு ஒரு பிளாஷ்பேக்… அதுக்கான காரணம்னு கதைல நல்லா சொல்லிருக்காரு.

ஒரு ஸ்டேஜ்க்கு அப்புறம் எப்படியாவது இந்த சூட்டிங்க முடிச்சிறணும். எல்லாமே ரொம்ப ஹார்டு ஒர்க். இந்தப் படத்துக்கு நிறைய டைம் தேவைப்பட்டுது. நீங்க எல்லாம் பார்த்து என்ஜாய் பண்ணுவீங்கன்னு நினைக்கிறேன். படத்திற்கான டிரெய்லர் வெளியீட்டு விழாவில் பேசிய ஆர்யா இவ்வாறு தெரிவித்துள்ளார்.

google news
Continue Reading

More in Cinema News

To Top