இறந்த கணவருடன் மகிழ்ச்சியான தருணம் - பவானி ரெட்டியின் திருமண வீடியோ வைரல்!

by பிரஜன் |   ( Updated:2021-10-14 23:44:30  )
பவானி ரெட்டி
X

பவானி ரெட்டி

பவானி ரெட்டியின் திருமண வீடியோ இணையத்தில் வைரல்!

பிக்பாஸ் 5 சீசன் நிகழ்ச்சியின் போட்டியாளரான பவானி ரெட்டி சின்னத்தம்பி சீரியலின் மூலம் தமிழ் தொலைக்காட்சியில் நடித்து இல்லத்தரசிகளிடம் பிரபலமானார். ஹைதராபாத்தை சேர்ந்த பவானி ரெட்டி தெலுங்கில் ஒரு சில படங்களில் நடித்துள்ளார்.

தெலுங்கு நடிகரான பிரதீப் குமார் என்பவரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். பின்னர் கணவருக்கு புகைபிடிக்கும் பழக்கம் இருந்ததை தட்டிக்கேட்டு சண்டையிட்டதால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் சண்டை பெரிதாக கணவர் பிரதீப் குமார் படுக்கையறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார்.

இதையும் படியுங்கள்: ரஜினினா மாஸ்தான்!…12 மணி நேரத்தில் அண்ணாத்த டீசர் செய்த சாதனை…

இந்த சம்பவத்தால் மிகவும் மனமுடைந்து போன பவானி அதிலிருந்து மீண்டு வரமுடியாமல் தவித்துள்ளார். அந்த சமயத்தில் தான் தன்னை பிசியாக வைத்துள்ள விஜய் டிவியில் கிடைத்த சீரியல் வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டுள்ளார். பின்னர் மீண்டும் ஒரு நபரை காதலித்து மறுமணம் செய்துக்கொண்டார். அந்த திருமணம் விவாகரத்தில் முடிந்துவிட்டது. இந்நிலையில் முதல் கணவர் பிரதீப்பை திருமணம் செய்துக்கொண்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

https://www.instagram.com/p/CU-eeHeDpWB/?utm_source=ig_embed&ig_rid=9627acd6-fbf9-42fe-9062-7859972ac8e9

Next Story