Biggboss Tamil: குளிக்கவே இல்ல.. ஆனா லவ்வு மட்டும் நடக்குது… பிக்பாஸ் சீசன்9ன் பூர்ணிமா 2.0!

Published on: December 5, 2025
---Advertisement---

Biggboss Tamil: பிக்பாஸ் தமிழ் சீசன் 9 தொடங்கி இரண்டு வாரங்கள் முடிந்து இருக்கும் நிலையில் பிரச்னை படையெடுக்க துவங்கி இருக்கிறது. இதில் இன்று நடந்த வொர்ஸ்ட் பெர்மாமர் போட்டியில் சில அதிர்ச்சி விஷயங்களை போட்டியாளர்கள் முன் வைத்துள்ளனர். 

தமிழ் பிக்பாஸ் சீசன் 9 அக்டோபர் 5ந் தேதி துவங்கியது. பெரிய போட்டியாளர்கள் எதிர்பார்ப்பு பட்டியலில் இருந்தாலும் யாரும் நிறைய அறியாத முகங்களே உள்ளே வந்து இருந்தனர். இவர்கள் வந்த அடுத்த நாளே சண்டையை துவக்கியதே ஆச்சரியமாக பார்க்கப்பட்டது. 

இதனை தொடர்ந்து இரண்டு வாரமாக ஓரே சண்டையாக மட்டுமே நடக்கிறது. முதல் வாரம் போட்டியாளர்களுக்கு தண்ணீர் கொடுக்காமல் டேங்க் தண்ணியை கொடுத்தார் பிக்பாஸ். இதனால் இருப்பதை அளவாக வைத்துக்கொண்டு பலர் ஒரு நாள் இரண்டு நாள் தள்ளி குளித்தனர். adhirai

முதல் வாரம் முடிந்த கையோடு இந்த வாரம் மாஸ்க் டாஸ்க் நடந்து இருக்கிறது. அதில் பிக்பாஸ் போட்டியாளர்கள் சரியாக திட்டமிட்டு விளையாடி டீலக்ஸ் டீமை தோற்கடித்துள்ளனர். அதிலும் கடைசியாக துஷாரை தோற்கடித்து கம்ரூதின் கேப்டன் போட்டிக்கு தேர்வாகி இருக்கிறார். 

மேலும், நேற்று இரவு பிக்பாஸ் டீமுக்கு சிறப்பான விருந்தும் கொடுக்கப்பட்டது. இந்நிலையில் வார இறுதிநாளான இன்று வொர்ஸ்ட் பெர்பாமர்களை போட்டியாளர்கள் நாமினேட் செய்தனர். அதிலும் அதிக வோட்டுகளை வாங்கிய ஆதிரை மற்றும் அரோரா ஜெயிலுக்கு செல்ல இருக்கின்றனர். 

இதில் ஆதிரையை நாமினேட் செய்யும் போது வியானா ஆதிரை குளிப்பதே இல்லை. அவள் வீட்டிற்குள் இல்லாமல் எப்போதும் பிக்பாஸ் டீமுடன் இருப்பதை சுட்டிக்காட்டி நாமினேட் செய்தார். கடந்த சில நாட்களாகவே ஆதிரை எஃப்ஜேவுடன் அதிகம் காணப்படுகிறார். 

அதிலும் அவர் விலகி போனாலும் இவர் நெருங்கி பேசுவதும் கட்டியணைத்தும் கொள்வதும் பார்ப்பவர்களுக்கு முகம் சுழிக்கும் வகையில் இருக்கிறது. குளிக்க நேரம் இல்லை. காதல் செய்ய மட்டும் நேரம் இருக்கா எனக் கேள்வி எழுந்து வருகிறது. 

கடந்த சீசனில் இவரின் நெருங்கிய தோழி பூர்ணிமாவும் நன்றாக ஆடிவந்த நிலையில் கடைசியில் நிக்ஸனுடன் நெருங்கிய பழகியதாலே வெளியேறினார். இவரும் தற்போது தன்னுடைய ஆட்டத்தை விட்டு வேறு ரூட் பிடிப்பது இவருக்கு ஆபத்தை கொடுக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

 

Leave a Comment