ஒப்பாரி பாடல் முதல் பிக்பாஸ் வரை - ‘பெரிய கறி’ இசைவாணியின் வாழ்க்கை கொஞ்சம் திரும்பி பார்க்கலாம்!

by பிரஜன் |   ( Updated:2021-10-04 04:15:57  )
esai vaani
X

esai vaani

நேற்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதல் போட்டியாளராக நுழைந்தது பிரபல பாடகி இசை வாணி. கானா பாடல்களை பாடி மிக குறுகிய காலத்தில் பேமஸ் ஆகி சமூகவல்தளங்கள் எங்கும் அவரது குரல் ஒலித்துக்கொண்டிருக்கும் நேரத்தில் அவரை மேலும் பிரபலமாக்கிக்கொள்ள விஜய் டிவி கொடுத்துள்ள மிகப்பெரும் வாய்ப்பு தான் பிக்பாஸ்.

வட சென்னையை பூர்விகமாக கொண்டுள்ள இசை வாணிக்கு 24 வயது தான் ஆகிறது. ஆர்மோனியம் கலைஞருக்கு மகளாக பிறந்து இசையில் ஊறி வளர்ந்திருந்தாலும் அப்பாவுக்கு கிடைக்காத வாய்ப்புகள், அப்பா சம்பாதித்த அவமானங்கள் வாழ்வின் அனுபவமாக எடுத்துக்கொண்டார் இசைவாணி. ஆரம்பத்தில் அப்பாவுடன் கச்சேரிகளுக்கு சென்றவர் நிறைய ஒப்பாரிப் பாடல்கள் பாடியிருக்கிறராம்.

isai vani

isa

பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக தனது திறமையை கிடைத்த சிறிய இடத்தில் எல்லாம் வாய்ப்புகளை பயன்படுத்திக்கொண்ட இவர் பிரபல இயக்குனர் பா.ரஞ்சித்தின் The Casteless Collective குரூப் பாடிய மாட்டு கரி அரசியலை எடுத்துரைக்கும் வகையில் ‘பெரிய கறி’ என்ற பாடலை பாடியதன் மூலம் ரசிகர்கள் வட்டாரத்தை பெற்று இன்று பிக்பாஸ் எனும் பெரிய பிளாட்பார்மில் தனது திறமையையும் உண்மை முகத்தையும் வெளிப்படுத்த வந்துள்ள அவருக்கு பேராதரவுகளும் பாராட்டுக்களும் குவிந்து வருகிறது.

Next Story