தமிழக அரசியலில் கால்பதித்துள்ள நடிகர் விஜய், சமீபத்தில் வேலூரில் நடந்த நிர்வாகிகள் சந்திப்பில் ஜல்லிக்கட்டு காளையை மையமாக வைத்து ஒரு குட்டி கதையை கூறியிருந்தார். இந்தக் கதையைத் தொடர்ந்து ஜூலி வெளியிட்ட தொடர் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
வேலூர் கூட்டத்தில் விஜய் பேசிய ஜல்லிக்கட்டு கதையை விமர்சித்த ஜூலி, விஜய் அண்ணா, உங்கள் பேச்சைக் கேட்டு உங்கள் ரசிகர்கள் ஜல்லிக்கட்டு காளை முன்னால் புல்லுக்கட்டோடு போய் நின்றால் அசம்பாவிதம் நடந்துவிடும். ஏற்கனவே கட்சி கூட்டத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50-ஆக இருக்கிறது, அதை 500 ஆக்கிவிடாதீர்கள் என்று பதிவிட்டார்.
ஜூலியின் இந்த வீடியோவுக்கு தவெகவினர் மற்றும் விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் மிகக் கடுமையான விமர்சனங்களையும், வசவுகளையும் முன்வைத்தனர். இதற்குப் பதிலளிக்கும் விதமாக அடுத்த வீடியோவை வெளியிட்ட ஜூலி:
உங்கள் ரசிகர்கள் என்னை மிகவும் மோசமாகப் பேசுகிறார்கள். இதற்குத்தான் சொன்னேன் உங்கள் ரசிகர்கள் முதிர்ச்சியற்றவர்கள் என்று. என்னை மிரட்ட வேண்டும் என்றால் நான் வீட்டிலோ அல்லது அலுவலகத்திலோ இருப்பேன். நீங்கள் தான் பனையூரை விட்டு வரமாட்டீர்கள், நான் வேண்டுமானால் வரட்டுமா?” என்று விஜய்க்கு நேரடியாகச் சவால் விடுத்தார். மேலும் உங்கள் டிவிகே வல்கர் வாரியர்ஸ் என்னை கடுமையாக கெட்டக்கட்ட வார்த்தையால் திட்டுகிறார்கள். இதைத்தான் சொன்னேன் உங்க ரசிகர்கள் மைனராக இருக்கிறார்கள், இல்லை என்றால் மண்டையில் மைனராக இருக்கிறார்கள் என கடுமையாக பேசி இருந்தார். இது தவெக ரசிகர்களை மேலும் கோபமடைய செய்தது. இதனையடுத்து ஜூலை தனிப்பட்ட வாழ்க்கை குறித்து மிக மோசமாக விமர்சித்தனர்.
ஜூலியின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து விமர்சித்த ரசிகர்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், சமீபத்தில் அவர் ஒரு கிண்டலான வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில், அருகில் இருக்கும் ஒருவரை காண்பித்து இவர்தான் என் மூன்றாவது புருஷன். தேர்தல் சமயத்தில் சரியாக கவனித்து மடக்கு ஊதிக்கு ஓட்டினை போடுங்க நீங்க மாத்தி போட்டுட்டா அப்புறம் அண்ணனுக்கு டெபாசிட் கூட கிடைக்காமல் போய்விடபோகுது என்று தன்னை விமர்சிப்பவர்களை மேலும் வெறுப்பேற்றும் வகையில் பதிவிட்டுள்ளார். இது சமூக வலைதளங்களில் ஒரு வார்த்தை போர் போல உருவெடுத்துள்ளது
.https://www.instagram.com/reel/DVaVuKqk4v_/?utm_source=ig_web_copy_link&igsh=MzRlODBiNWFlZA==
நாடக உலகில் எப்படிப்பட்ட சாதனையாளர் எம்ஆர்.ராதா என்பது எல்லோரும் அறிந்த விஷயம். எந்த ஒரு நடிகராக இருந்தாலும் படிப்படியாகத் தானே…
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்க நாதன் நடித்து வருகிற 10ம் தேதி வெளியாகும் படம் எல்ஐகே. தொடர்ந்து ஹாட்ரிக்ல்…
Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரில் இந்த வாரம் நடக்க இருக்கும் எபிசோட் குறித்த…
Anitha Sampath: செய்தி வாசிப்பாளராக இருந்த அனிதா சம்பத் தற்போது சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வருகிறார். இவர் தற்போது…
தமிழக அரசியல் களம் தற்போது பரபரபான கட்டத்தை எட்டியுள்ளது. தேர்தல் நெருங்கி வருவதால் அரசியல கட்சிகள் பரப்புரையில் பிஸியாக இருந்து…
Cook with comali 7: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கும் குக் வித் கோமாளி சீசன் 7 நிகழ்ச்சியின் முதல்…