பிக்பாஸ் கவினுக்கு விரைவில் திருமணம்?.. பொண்ணு யாருன்னு தெரியுமா?...

by prabhanjani |
KAVIN
X

சரவணன் மீனாட்சி சீரியல் மற்றும் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் கவின். இவர் தற்போது லிப்ட், டாடா உள்ளிட்ட படங்களில் நடித்து தமிழ் சினிமாவிலும் ஹீரோவாகிவிட்டார். அடுத்தடுத்து பல படங்களில் நடித்து வருகிறார் என்று தகவல் வெளியாகிவருகிறது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற போது, சக போட்டியாளரான லாஸ்லியாவை காதலித்து வந்தார். இவர்களின் காதல் தான் அந்த சமயத்தில் ட்ரிண்டிங் நியூஸாக இருந்தது.

kavin

இவர்களுக்கென்றே தனி ரசிகர் பட்டாளம் உருவானது. ஆனால் வெளியே வந்த பிறகு அவர்கள் யார் என்றே தெரியாதது போல நடந்துகொண்டார்கள். அந்த காதலை பற்றி கேள்வி கேட்டால் கூட தவிர்த்து வந்தார்கள். பின்னர் கவின் ஒரு மேடையில், எனக்கும் லாஸ்லியாவிற்கும் இடையே செட் ஆகாது. நாங்கள் காதலிக்கவில்லை என்று பிரிந்துவிட்டோம் என தெளிவுபடுத்தியிருந்தார். அதன் பிறகு இருவரும் வெவ்வேறு படங்களில் நடித்து, சினிமாவில் கவனம் செலுத்தி வருகின்றனர்.

தொலைக்காட்சியில் தொகுப்பாளராக தொடங்கி, இன்று தமிழ் சினிமாவில் ஹீரோவாகி இருக்கிறார் கவின். சரவணன் மீனாட்சி சமயத்தில் இருந்தே இவருக்கு பெண் ரசிகர்களை ஏறாளம். தற்போது கவின் 2 படங்களில் நடித்துவருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சமூக வலைதளங்களில் ஒரு செய்தி மிக வேகமாக பரவி வருகிறது. நடிகர் கவினுக்கு கல்யாணம் என்றும் அதுவும் அடுத்த மாதமே என்றும் கூறப்படுகிறது.

kavin

ஆகஸ்டு மாதம் 20ம் தேதி கவினுக்கு திருமணம் நடைபெறவுள்ளதாக சமூக வலைதளங்களில் செய்தி ஒன்று பரவி வருகிறது. அதுவும் காதல் திருமணம் இல்லையாம், வீட்டில் பார்த்த பெண்ணை கவின் திருமணம் செய்துகொள்ள போகிறார் என்று கூறப்படுகிறது. இதற்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை. விரைவில் அவர் இது குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் என்று கூறப்படுகிறது.

இதையும் படிங்க-சூர்யாவை அடுத்த சூப்பர்ஸ்டார் ஆக்க திட்டம்!.. தயாரிப்பாளரின் சூழ்ச்சியை புட்டு புட்டு வைத்த பிரபலம்!..

Next Story