குத்துக்கு பத்து: வில்லங்கமான தொடரில் நடிக்கும் பிக்பாஸ் சம்யுக்தா!!

by ராம் சுதன் |
BIGG BOSS SAMYUKTHA
X

டிவி சீரியல்கள் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை சம்யுக்தா. இதன்பின் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 4ல் கலந்துகொண்டு அனைத்து மக்களுக்கும் நன்கு பரிச்சயமானவரானார். இவர் விஜய் டிவி விஜே பாவனாவின் சகோதரி ஆவார்.

விஜய்சேதுபதி நடிப்பில் வெளியான துக்ளக் தர்பார் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தார் சம்யுக்தா. 36 வயதாகும் இவருக்கு திருமணமாகி ஒரு குழந்தையும் உள்ளது. தற்போது இவர் 'குத்துக்கு பத்து' என்ற வெப் சீரியலில் நடிக்க உள்ளார்.

BIGG BOSS SAMYUKTHA

BIGG BOSS SAMYUKTHA

டைட்டிலே வில்லங்கமாக இருக்கே என்று ஆராய்ந்தபோதுதான் தெரிந்தது இதன் இயக்குனர் ஏற்கனவே ஓர் அடல்ட் சீரியஸை இயக்கியுள்ளார். பல்லுப்படாம பாத்துக்கோ என்ற வெப் தொடர் மூலம் இயக்குனரானவர் யூடியூப் சேனல் புகழ் வரதராஜன். அடல்ட் கண்டண்டை மையமாக வைத்து உருவான இந்த தொடர் இன்னும் வெளியாகவில்லை.

இந்நிலையில் அவர் குத்துக்கு பத்து என்ற தொடரை இயக்க உள்ளார். இதில் சம்யுக்தாவுடன், ஆடுகளம் நரேன், போஸ் வெங்கட் உட்பட பலர் நடித்துள்ளனர். விரைவில் இடத்தொடர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story