இந்த தடவை யாரும் சிக்கல… விஜய் டிவி எடுத்த அதிரடி முடிவு.! மகிழ்ச்சியில் பிக் பாஸ் ரசிகர்கள்…

Published on: August 26, 2022
---Advertisement---

விஜய் டிவியில் 5 சீசன்களை கடந்து வெற்றி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து அடுத்த சீசனை நோக்கி நகர்ந்து உள்ள  நிகழ்ச்சி என்றால் அது பிக் பாஸ் நிகழ்ச்சி தான். கடந்த 5 சீசனையும் உலகநாயகன் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்கி வந்தார்.

kamal_haasan_bigg_boss_tamil_5_details (1)

இடையில் பிக் பாஸ் அல்டிமேட் என OTTக்காக தொடங்கப்பட்டாலும், அதில் சிம்பு தொகுத்து வழங்கினாலும், அது பெரிய அளவில் ரசிகர்களை கவரவில்லை என்பதே நிதர்சனமான உண்மை.

இதையும் படியுங்களேன் – மனுஷன் வாழ்கிறான்யா… நயன்தாரா – விக்கி ஹனிமூன் சீக்ரெட்ஸ்.. ஒரு நாள் வாடகை தெரியுமா.?!

தற்போது விரைவில் 6வது சீசன் தொடங்கப்பட உள்ளது. வழக்கமாக பிக் பாஸ் போட்டியாளர்கள் ஓரளவு மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் நபர்களை வைத்து தான் நடத்துவார்கள். பிக் பாஸ் வந்தால் பேர் புகழ் கிடைக்கும் என்கிற மனநிலை மாறி  இருக்குற பேரும் போய்விடுமோ என பயத்தில் பலரும் வராமல் தவிர்த்து வருகின்றனர் என்று கூறப்படுகிறது.

இதையும் படியுங்களேன் – கடவுளுக்கு அடுத்து கமல் சார் தான்… கண்கலங்க வைத்த மூத்த நடிகரின் நெகிழ்ச்சி பதிவு..

அதனால், இந்த முறை சாமானிய மக்களும் கலந்துகொள்ளும் விதமாக புதிய நடைமுறையை vijay.startv.com/BigBoss/Index எனும் தளத்தில் சென்று உங்கள் பெயர் , முகவரி, மொபைல் நம்பர் கொடுத்து பதிவு செய்து, எதற்காக பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வர விரும்புகிறீர்கள் என வீடியோ மூலம் 50 MB க்கு மிகாமல் ஒரு வீடியோ எடுத்து அதனை உள்ளீடு செய்ய வேண்டும். அதில் தேர்ந்தெடுக்கும் நபர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவர் என குறிப்பிடப்பட்டுள்ளது .

Manikandan

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.