Connect with us
rajini

latest news

ஜெய்லர், லியோ எல்லாத்தையும் ஓரங்கட்டுங்க! இனிமே எங்க ஆட்டம்தான் – அறிவிப்பை வெளியிட்ட பிக்பாஸ் சீசன் 7

சில தினங்களாக ஜெய்லர் மற்றும் லியோ படத்தை பற்றி தான் இணையத்தில் செய்திகள் அடிபட்டு வந்தது. அதற்கேற்றாற் போல் ஜெய்லர் படத்தின் வசூலையும் நேற்று சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டு அனைவரையும் திக்குமுக்காட வைத்தது.

இந்த நிலையில் இன்று ட்விட்டரில் விஜய் டிவி ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. அனைவரும் ஆர்வமாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த பிக்பாஸ் சீசன் 7னின் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது.

இதையும் படிங்க : ‘கேப்டன் பிரபாகரன்’ படம் பார்க்க வந்தவர்களுக்கு கேப்டன் கொடுத்த சர்ப்ரைஸ்! சொல்லும் போதே அழுத மன்சூர் அலிகான்

இன்று இரவு சரியாக 7: 7 மணியளவில் அதற்கான அறிவிப்பை விஜய் டிவியில் வெளியிடுவதாக ஒரு போஸ்டரை வெளியிட்டிருக்கிறது. ஏற்கெனவே இந்தியன் 2 படத்தில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் கமல் இப்போது அமெரிக்காவில் இருப்பதாக கூறப்பட்டது.

அமெரிக்காவில் இருந்து சென்னை வந்ததும் நேராக பிக்பாஸ் சீசன் 7லில் தான் கலந்து கொள்வார் என்று கூறப்பட்டு வந்தது. மேலும் இந்த சீசனில் பல புதிய அதிரடி மாற்றங்கள் இருக்கப்போவதாகவும் கூறப்பட்டு வந்தது.

ஏற்கெனவே செய்தி வாசிப்பாளர் ரஞ்சித் இந்த சீசனில் முதல் ஆளாக களமிறங்கியிருக்கிறார் என்று செய்திகள் வெளியானது. ஏற்கெனவே நடிகர் அப்பாஸை கமல் பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக பரிந்துரை செய்தார் என்று நான் கலந்து கொள்ளவில்லை என்றும் அப்பாஸ் கூறியிருந்தார்.

இதையும் படிங்க : வெறித்தனமாக களமிறங்கும் வேட்டையன்!.. தலைவர் 170 படத்தின் கதை இதுதான்!.. சும்மா தெறி!…

ஒரு வேளை வாய்ப்பிருந்தால் அப்பாஸ் கூட இந்த சீசனில் கலந்து கொள்ள வாய்ப்பிருக்கிறது என்று கூறுகிறார்கள். எப்படி இருந்தாலும் இன்று வெளியாகும் அந்த அறிவிப்பின் மூலம் இன்னும் பல செய்திகள் நமக்கு தெரியவரும். ஆகவே இன்று இரவு 7 மணி வரைக்கும் அனைவரும் காத்திருக்க வேண்டியது தான்.

google news
Continue Reading

More in latest news

To Top