பாடிஷேம் பண்ண நிக்சன்.. சும்மா புரட்டி எடுத்த பாரதி கண்ணம்மா.. வெளியே வந்தா அவ்ளோதான்!..
பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை வினுஷாவை பிக் பாஸ் வீட்டில் நிக்சன் பாடிஷேம் பண்ண விஷயத்திற்கு வினுஷா பதிலடி கொடுத்துள்ளார். விஜய் டிவி பிரபலங்கள் தான் பலரும் பிக் பாஸ் வீட்டை இந்த சீசனிலும் இன்னொரு சீரியல் போலவே நடத்தி வருகின்றனர்.
மிக்சர் தின்னி என விஜய் டிவியே வினுஷாவை கிண்டல் செய்து எலிமினேட் செய்த நிலையில், வினுஷாவின் உடல் அழகாகவே இல்லை என்று அசிங்கமாக அவரை பாடிஷேமிங் செய்திருந்தார் நிக்சன்.
இதையும் படிங்க: பெட்ரூமில் அப்படியொரு போஸ்!.. தாறுமாறு பண்ணும் தங்கலான் நடிகை.. ஜொள்ளுவிடும் ஃபேன்ஸ்!..
இதை வினுஷா இருக்கும் போதே சொன்னதாக இன்னொரு பெண்ணான ஐஷுவிடம் சொல்ல அவர் இது செம ஜோக் என நினைத்துக் கொண்டு கொஞ்சம் கூட அசிங்கமே இல்லாமல் பல்லை பல்லைக் காட்டி சிரிப்பதை பார்த்து கடுப்பான ரசிகர்கள் இந்த விவகாரத்தை வினுஷாவையே டேக் செய்து கோர்த்து விட்டுள்ளனர்.
இந்நிலையில், அதை பார்த்து கடுப்பான வினுஷா நிக்சன் என்னை பாடி ஷேமிங் செய்வது குறித்து தெரியவே தெரியாது என்றும் வீட்டில் இருந்தவரை அவன் அப்படி பேசவே இல்லை. அவன் சொல்வது எல்லாமே பொய். அதே போல புல்லி கேங்குக்கும் சரியான பதிலடி சீக்கிரமே கிடைக்கும் என்றும் நிக்சன் பண்ண பாடி ஷேமிங்கிற்கு நிச்சயம் அவனுக்கு தக்க தண்டனை கிடைக்கும் என வினுஷா கோபத்தை கொப்பளித்துள்ளார்.
இதையும் படிங்க: துணிவு ஒட்டுமொத்த கலெக்ஷனையே தூக்கி போட்டு மிதித்த லியோ.. தரமான சம்பவம்!..
பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை வினுஷா பற்றி படு மோசமாக எது எது எங்க எங்க இருக்கணுமோ அது அது அங்க அங்க இல்லைன்னு பச்சையாக பேசிய நிக்சனுக்கு ரெட் கார்டு கொடுத்து அனுப்ப வேண்டும் என கோரிக்கைகள் கிளம்பி உள்ளன.