துணிவு ஒட்டுமொத்த கலெக்ஷனையே தூக்கி போட்டு மிதித்த லியோ.. தரமான சம்பவம்!..
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய், த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், கெளதம் மேனன், மிஷ்கின், சாண்டி மாஸ்டர், மன்சூர் அலி கான், பிரியா ஆனந்த், ஜனனி, மேத்யூ தாமஸ், மடோனா செபாஸ்டியன், தினேஷ் மாஸ்டர் உள்ளிட்ட பலர் நடித்த லியோ திரைப்படம் கடந்த அக்டோபர் 19ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது.
பீஸ்ட் மற்றும் வாரிசு படங்கள் வெளியானது போல பெரிய போட்டியுடன் லியோ வெளியாகாத நிலையில், மிகப்பெரிய வசூல் வேட்டையை நடத்தி உள்ளது.
இதையும் படிங்க: ஜெயிலர் படத்த பாதிக்கு மேல பார்க்க முடியல!.. அவர் கூடவ நடிச்சிட்டு இப்படி சொல்லலாமா?!…
அஜித்தின் துணிவு திரைப்படம் உலகளவில் செய்த வசூல் அறிவிப்பை தயாரிப்பு நிறுவனம் அறிவிக்காத நிலையிலும் 192 கோடி வசூலை ஈட்டியுள்ளதாக கணிப்புகள் வெளியாகி உள்ளன.
இந்நிலையில், ஓவர்சீஸில் மட்டும் நடிகர் விஜய்யின் லியோ திரைப்படம் 201 கோடி ரூபாய் வசூலை ஈட்டியுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை அஹிம்சா என்டர்டெயின்மென்ட் எனும் வெளிநாடுகளில் லியோ படத்தை வாங்கி வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இதையும் படிங்க: பிரதீப் சைக்கோ இல்லை!.. உள்ளே இருக்குற அதுங்கதான் சைக்கோ.. கடுப்பான ஜெயிலர் பட நடிகை!..
விஜய் நடித்த லியோ திரைப்படம் வெளிநாடுகளில் ஒட்டுமொத்தமாக 201 கோடி ரூபாயும் தமிழ்நாட்டில் 200 கோடி ரூபாயும் கேரளாவில் 59 கோடி ரூபாயும், ஆந்திரா/ தெலங்கானாவில் 47 கோடியும், கர்நாடகாவில் 40 கோடி ரூபாயும் வட மாநிலங்களில் 38 கோடியும் வசூல் செய்து ஒட்டுமொத்தமாக 602 கோடி ரூபாய் வசூல் ஈட்டியிருப்பதாக கணிப்புகள் வெளியாகி உள்ளன.
நடிகர் ரஜினி நடித்த ஜெயிலர் திரைப்படம் 26 நாட்களில் வெளிநாடுகளில் ஒட்டுமொத்தமாக 192.2 கோடி வசூல் செய்த நிலையில், லியோ ஜெயிலர் படத்தின் ஓவர்சீஸ் வசூல் சாதனையும் முறியடித்து இந்த ஆண்டின் நம்பர் ஒன் இண்டஸ்ட்ரி ஹிட்டாக மாறியுள்ளதாக கூறுகின்றனர்.
COPYRIGHT 2024
Powered By Blinkcms