பிரதீப் சைக்கோ இல்லை!.. உள்ளே இருக்குற அதுங்கதான் சைக்கோ.. கடுப்பான ஜெயிலர் பட நடிகை!..
பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் கடந்த வாரம் பிரதீப் ஆண்டனிக்கு எதிராக பிக் பாஸ் பெண் போட்டியாளர்கள் ஐந்து பேர் அடுக்கிய குற்றச்சாட்டு காரணமாக பிக் பாஸ் வீட்டிலிருந்து அதிரடியாக பிரதீப் ஆண்டனி வெளியேற்றப்பட்டார்.
பிரதீப் ஆண்டனிக்கு பிக் பாஸ் பிரபலங்கள் இத்தனை பேர் ஆதரவு தெரிவித்து வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த அளவுக்கு அவர் அனைவரிடத்திலும் பிரபலமானவராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: நான் நடிகனாக காரணமே தல தான்… ரஜினி செய்யாததை செய்த அஜித்..! ராகவா லாரன்ஸ் சொன்ன ஆச்சரிய தகவல்..!
பிரதீப்பின் நண்பர் கவின் முதல் முன்னாள் பிக்பாஸ் போட்டியாளர்களான சினேகன், பிரியங்கா, அமீர், பாவனி, நிரூப், அசீம், நிவாஷினி, ஆரி அர்ஜுனன் உள்ளிட்ட பலர் தங்கள் கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், பிக் பாஸ் சீசன் நான்கில் போட்டியாளராக பங்கேற்ற அறந்தாங்கி நிஷா தற்போது பிரதீப் ஆண்டனியை வெளியேற்றியது தவறு என்றும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என ஒருத்தர் மீது பழிச்சொல் சொல்லி அவரை வெளியே அனுப்பினால் கடைசிவரை பலரும் அவரை அப்படித்தான் பார்ப்பார்கள் என நிஷா தனது கருத்தை முன்வைத்துள்ளார்.
இதையும் படிங்க: போர் அடிக்குது.. என்ன செய்யிறதுனு தெரியலை.. அதான் இதை செய்ய போறேன்.. மிஷ்கின் தடாலடி..!
சின்னத்திரை மட்டுமின்றி சினிமாவிலும் தொடர்ந்து நிஷா நடித்த வருகிறார். இந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வசூல் வேட்டையை நடத்திய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்துள்ள நிஷா நடிகர் கமல் பிரதீப் ஆண்டனியின் கருத்தை கேட்டிருக்க வேண்டும் என்றும் ஒரு நிமிஷம் கேட்டிருந்தால் அவனை அனைத்தையும் சொல்லிவிட்டு இந்தப் பெண்களுடன் இருக்க முடியாது என வீட்டை விட்டுக் கிளம்பி இருப்பான் என பேசி உள்ளார்.
பைத்தியத்தை எல்லாம் யாரும் உள்ளே அனுப்ப மாட்டார்கள். அவன் சைக்கோ கிடையாது. அவனை சைக்கோ என சொன்ன உள்ளே உள்ளவர்கள் தான் சைக்கோ என நிஷா க்ளீன் போல்டு செய்துள்ளார்.
COPYRIGHT 2024
Powered By Blinkcms