பிக்பாஸ் தமிழ் சீசன் 8ல் முதல் போட்டியாளர் இவரா? செம ஸ்கெட்சா இருக்கே!...
பிக்பாஸ் தமிழ் சீசன் 8ல் முதல் போட்டியாளர் குறித்த முக்கிய தகவல்கள் இணையத்தில் கசிந்துள்ளது.
ரியாலிட்டி ஷோக்களின் பாஸ் என அழைக்கப்படுவது தான் பிக்பாஸ் தமிழ். முதல் சீசன் தொடங்கியதில் இருந்து இதற்கு ரசிகர்கள் ஏராளம். அதிலும் இந்த நிகழ்ச்சியின் வெற்றிக்கு தொகுப்பாளர் கமல்ஹாசன் தான் முக்கிய காரணமாக இருந்தார். ஏறத்தாழ 7 சீசன்களை தொகுத்து வழங்கி வந்தவர் இந்த சீசனில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
இதையும் படிங்க: ரஜினி நாயகியிடம் இருக்கும் அஜித்தின் அந்த விஷயம்… அம்மணி கெத்துதான்!
இதனால், அடுத்த சீசனை யார் தொகுத்து வழங்குவார் என்ற எதிர்பார்ப்பு உருவானது. பலரிடம் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் தற்போது விஜய் சேதுபதி பிக்பாஸ் தமிழ் சீசனில் இணைய இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்த மாதத்திற்குள் விஜய் சேதுபதியின் இண்ட்ரோ புரோமோ வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது தொகுப்பாளர் மாறி இருப்பதால் பிக்பாஸ் 8வது சீசனை ஹிட்டடிக்க வைக்க தயாரிப்பு நிர்வாகம் பல வழிகளில் முயற்சி செய்து வருகிறதாம். வித்தியாசமான டாஸ்குகளை ரெடி செய்வதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இதுப்போல, போட்டியாளர்கள் தேர்விலும் கவனம் செலுத்தி வருகின்றார்களாம்.
இதையும் படிங்க: 18 மணி நேர உழைப்பு வீணாப் போச்சே? ‘குட் பேட் அக்லி’ ரிலீஸில் இப்படி ஒரு சிக்கலா?
பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்து ரசிகர்களும் பெரிய அளவில் ஹிட்டடித்தார். இவரின் எண்ட்ரி பலவகைகளில் ரசிகர்களுக்கு சுவாரஸ்யமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், பிக்பாஸ் சீசன் 7ல் வைல்ட்கார்ட் மூலம் எண்ட்ரியாகி சரியாக தன்னுடைய விளையாட்டை ஆடி ரசிகர்களின் கவனம் ஈர்த்தவர் அர்ச்சனா ரவிச்சந்திரன். இவரின் காதலராக கிசுகிசுக்கப்பட்டு வருபவர் தான் அருண் என்பதும் குறிப்பிடத்தக்கது.