மீண்டும் வருகிறாரா கமல்ஹாசன்? அடுத்த சீசன் தமிழ் பிக்பாஸ் தொகுப்பாளர் இவர்தானாம்… Official அப்டேட்..
Biggboss Tamil: தமிழ் பிக்பாஸ் சீசன் 8 முடிந்து இருக்கும் நிலையில் அடுத்த சீசன் தொகுப்பாளர் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டு இருக்கிறது.
பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சி 8 சீசன்களை முடித்து இருக்கிறது. இதில் முதல் 7 சீசன்களை நடிகர் கமல்ஹாசனே தொகுத்து வழங்கி வந்தார். பொதுவாக கமல்ஹாசன் தேவையான நேரங்களில் அடாவடியாக கேட்டும். சில இடங்களில் பொறுமையாக பேசியும் தன்னுடைய ஆங்கரின் திறமையை காட்டி விடுவார்.
இதற்காக அவர் பல இடங்களில் விமர்சிக்கப்பட்டாலும் கமல்ஹாசனின் அக்மார்க் ஆக்ஷனோடு அந்த காட்சிகள் இன்றளவுக்கும் வைரலாகி இருக்கிறது. கமல்ஹாசன் பல இடங்களில் பொறுமையாகவே பேசுவார் இதை கூட அப்போது விமர்சித்தனர்.
முதல்முறையாக நடிகர் கமல்ஹாசன் இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேற இருக்கிறார் என அறிவிக்கப்பட்ட போது பலரும் அதிர்ச்சி அடைந்தனர். கமல்ஹாசன் இடத்தினை யாராலும் நிரப்ப முடியாதே. இன்னொரு நடிகர் எப்படி இந்த இடத்துக்கு சரியாக இருப்பார் என்ற கேள்விகள் எழுந்தது.
இதில் பார்த்திபன், சரத்குமார் என பல பிரபலங்களின் பெயர்கள் ஆராயப்பட்டது. ரசிகர்கள் கூட யாராக இருக்கும் என மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் இருந்தனர். அந்த நேரத்தில் விஜய் சேதுபதி நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இருப்பதாக தகவல்கள் கசிந்தது.
அவ்ர் எப்படி சரியாக இருப்பார் என பல யூகங்கள் எழுந்தது. அதை தொடர்ந்து விஜய் சேதுபதி தான் பிக்பாஸின் புதிய ஹோஸ்ட் என்ற அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியானது. ஆனால் அவர் எப்படி இருப்பார் என பலருக்கு பெரிய அளவில் எதிர்பார்ப்பு இருந்தது.
ஆனால், முதல் நாளில் இருந்தே எங்கு எதை கேட்க வேண்டும். யாருக்கு பல்ப் கொடுக்க வேண்டும் என தெளிவாக பேசியே தொடங்கினார். அங்கிருந்தே அவர் ஆட்டம் தொடங்கியது. இருந்தும் நிகழ்ச்சி பிரபலமாக போட்டியாளர்களின் ரசிகர்கள் விஜய் சேதுபதியை தொடர்ந்து விமர்சிக்க தொடங்கினார்.
இந்நிலையில், பிக்பாஸ் தமிழ் சீசன் 8 இறுதி எபிசோட் முடிந்து இருக்கும் நிலையில் அடுத்த சீசன் தொகுப்பாளர் யார் என்ற எதிர்பார்ப்பு தற்போதே உருவாகி இருக்கிறது. ஆனால் அடுத்த சீசன் கமல்ஹாசன் வர மாட்டார். விஜய் சேதுபதி தான் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.