பிக்பாஸ் வரலாற்றில் முதல் முறையாக… சவுந்தர்யாவின் லைவ் புரோபோசல்… உள்ளே வந்த பிபி பிரபலம்
Biggboss Tamil: பிக்பாஸ் தமிழ் 8ல் போட்டியாளராக இருக்கும் சவுந்தர்யா உள்ளே வந்த தன்னுடைய நண்பரிடம் காதலை சொல்லி இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. அந்த நண்பர் தான் ரசிகர்களுக்கு மேலும் சுவாரஸ்யமாக மாற்றி உள்ளது.
பிக்பாஸ் தமிழ் 8ல் இந்த வாரம் குடும்பங்கள் உள்ளே வந்த பிரீஸ் டாஸ்க் நடத்தப்பட்டது. இதில் நேற்றுடன் போட்டியாளர்களின் குடும்பங்கள் வந்து சென்றுவிட்டனர். ஆனால் அது டிஆர்பிக்கு போதாதே. அதனால் இன்று போட்டியாளர்களின் பிரபல நண்பர்கள் உள்ளே வர இருக்கின்றனர்.
முதலில் அருண் பிரசாத்துக்காக அர்ச்சனா மட்டுமே உள்ளே வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது 6 போட்டியாளர்களின் நண்பர்கள் உள்ளே வர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அந்த வகையில் முதல் ஆளாக கடந்த சீசன் போட்டியாளரான விஷ்ணு தன்னுடைய தோழி சவுந்தர்யாவுக்காக உள்ளே வர இருக்கிறார்.
இவர் பிக்பாஸுக்குள் உள்ளே சென்ற போதே அவருக்காக வந்து அமர்ந்தவர் சவுந்தர்யா. இருவரும் காதலிப்பதாக வதந்தி பரவிய போது கூட இருவருமே இதுகுறித்து வாய் திறக்காமலே இருந்து வந்தனர். ஆயிஷாவுடன் காதல் என விஷ்ணு மீது வதந்தி பரப்பிய போது அதற்கு அவர் விளக்கம் கொடுத்தார்.
ஆனால் சவுந்தர்யா விஷயத்தில் வாய் மூடி இருந்தார். இந்நிலையில் தற்போது உள்ளே வந்திருக்கும் விஷ்ணுவிற்கு சவுந்தர்யா லைவ்வாக தன்னை கல்யாணம் செய்துக் கொள்வாயா? என லைவ் புரோபோசல் செய்து இருக்கிறார்.
இதை பார்த்த ரசிகர்கள் தற்போது ஆச்சரியம் அடைந்து இருக்கின்றனர். இதற்கு விஷ்ணு பெரிய அளவில் ரியாக்ட் செய்யவில்லை என்றாலும் அதை அழகாக கையாண்டு இருக்கிறார். ஆனால் இது ஸ்க்ரிப்ட்டிற்காக செய்யப்பட்டது போல இருப்பதாகவும் கூறப்பட்டு வருகிறது.
Also Read: கேப்டன் விஜயகாந்த் தவற விட்ட பிளாக்பஸ்டர் படங்கள்... லிஸ்ட்ல இவ்ளோ இருக்கா?