பாரபட்சம் காட்டுகிறாரா விஜய்சேதுபதி? தடை செய்யனுமா? பிக்பாஸில் நடப்பது என்ன?
பிக்பாஸ் சீசன் 8:
70 நாட்களைக் கடந்து விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது பிக் பாஸ் நிகழ்ச்சி. இறுதிக்கட்டத்தை நெருங்கும் வேலையில் இந்த சீசன் பற்றிய பல சர்ச்சைகள் எழுந்த வண்ணம் இருக்கின்றன. 70 நாட்களை கடந்தும் இன்னும் வீட்டில் நிறைய போட்டியாளர்கள் இருப்பதாகவே தெரிகிறது. அதனால் இனிமேல் வரும் வாரங்களில் டபுள் எஃபெக்ஷன் நடக்க வாய்ப்புகள் இருக்கும் என கூறப்படுகிறது. அந்த வகையில் கடந்த சில வாரங்களாக அடுத்தடுத்து இரண்டு போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினார்கள்.
தற்போது போட்டியாளர்களின் எண்ணிக்கை 13 ஆக இருக்கின்றது. இறுதி கட்டத்தை நெருங்க நெருங்க போட்டியாளர்களிடம் ஒரு உத்வேகமும் கடும் போட்டியும் நிலவி வருகிறது. அதற்கு ஏற்ப பிக் பாஸ் வீட்டில் நிறைய டாஸ்க்கள் அதுவும் கஷ்டமான டாஸ்க் கொடுக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் பிக்பாஸ் உள்ளே இருக்கும் போட்டியாளர்களுக்கு ஒரு குறிப்பிட்ட டாஸ்க் ஒன்றை கொடுத்தார். அந்த டாஸ்க்கில் ஜெஃப்ரி ராணவ்வை கீழே அழுத்தியதில் ராணவின் தோள் பட்டையில் பலத்த காயம் ஏற்பட்டு வலியால் துடித்துக் கொண்டிருந்தார்.
பாரபட்சம் காட்டும் விஜய்சேதுபதி:
உடனே அவர் கன்ஃபெஷன் அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டு மருத்துவ சிகிச்சையும் அளிக்கப்பட்டது. மருத்துவ சிகிச்சைக்கு பின் மீண்டும் ராணவ் உள்ளே அனுப்பப்பட்டார். இன்னொரு புறம் பிக்பாஸில் ராணவ் கூறும் எதையும் விஜய் சேதுபதி காது கொடுத்து கேட்க வில்லை என ராணவின் தந்தை தற்போது கூறியிருக்கிறார். மேலும் அவர் பேசும்போது ராணவ் என்ன பேசினாலும் நீ உட்காருன்னு விஜய் சேதுபதி சொல்லிடுறாரு. அவர் ஏன் அப்படி நடந்து கொள்கிறார் என்று எங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை.
குடும்பப் பின்னணி அது இதுன்னு சொல்லி சில போட்டியாளர்கள் கிட்ட மட்டும் ரொம்ப அக்கறையா நடந்துக்கிறார் என்று நினைக்கத் தோணுது. சமமா நடத்த வேண்டியதுதானே அவருடைய பொறுப்பு என ராணவின் அப்பா அவருடைய வேதனையை கொட்டி இருக்கிறார். ராணவின் அப்பா கூறுவதைப் போல ஆரம்பத்திலிருந்து இப்போது வரைக்கும் விஜய் சேதுபதியின் மீது இந்த மாதிரி ஒரு விமர்சனம் இருக்கத்தான் செய்கிறது .
காட்டம் காட்டிய கூல் சுரேஷ்:
சில போட்டியாளர்களிடம் அவர் அக்கறை காட்டுவதாகவும் சில போட்டியாளர்களிடம் அவர் வெறுப்பையும் தாண்டி அவர்களை கண்டு கொள்ளவே இல்லை என்பதும் தெள்ளத் தெளிவாக தெரிகிறது. இதற்கிடையில் நடிகர் கூல் சுரேஷ் பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியை தமிழக அரசு உடனடியாக தடை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்திருக்கிறார். அதுவும் ராணவ் பற்றி தான் அவர் குறிப்பிட்டு பேசி இருந்தார்.
இன்று அவருடைய கை உடைந்து விட்டது. நாளை வேறு ஏதாவது உடைந்தால் அவருக்கு குழந்தை பிறக்குமா? என்ன விளையாட்டா விளையாடுறீங்க? தமிழகம் இப்போதுதான் அமைதியாக இருக்கிறது. அதை இப்போது சீர்குலைப்பதே இந்த பிக் பாஸ் நிகழ்ச்சி தான். அதனால் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியை தமிழக அரசு தடை செய்ய வேண்டும். இனி பிக் பாஸ் 9 சீசன் வரவே கூடாது என்றும் கூல் சுரேஷ் கோரிக்கை விடுத்திருக்கிறார்.
இதையும் படிங்க: நிரோஷாவுக்கு ரஜினி பட வாய்ப்பு வந்தது எப்படி? அவரே சொல்லிட்டாரே..!