இனி 24 மணிநேரமும் 'இந்த' பிக் பாஸ் ஒளிபரப்பாகும்.! ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது.!
பிக்பாஸ் நிகழ்ச்சி நேற்றுடன் நிறைவு பெற்றுவிட்டது. இதில் ராஜு பிக்பாஸ் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். விஜய் டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினி பிரியங்கா இரண்டாவது வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். இதனை தொடர்ந்து பிக்பாஸ் நிறைவு பெற்று விட்டதாக ரசிகர்கள் கவலை அடைந்தனர்.
அந்த நேரம் பிக்பாஸ் தொகுப்பாளர் கமல்ஹாசன் ஒரு அறிவிப்பை கூறியுள்ளார். அதாவது பிக்பாஸ் நிகழ்ச்சியானது பிரத்தியேகமாக ஓடிடி தளத்திற்காக பிக்பாஸ் அல்டிமேட் என விரைவில் தயாராக உள்ளதாம்.
அந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் இதற்கு முன்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரபலங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு கலந்து கொள்ள உள்ளனராம். இந்த நிகழ்ச்சி 24 மணி நேரமும் அந்த OTT தளத்தில் ஒளிபரப்பப்படும். ரசிகர்கள் எப்போது வேண்டுமானாலும் அதனை ஓபன் செய்து போட்டியாளர்கள் அந்நேரம் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்பதை பார்க்கலாம்.
அந்த அல்டிமேட் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கும் உலகநாயகன் கமல்ஹாசன் தான் நிகழ்ச்சி தொகுப்பாளராம். விரைவில் அதற்கான அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.