அந்த நைட்ல அப்படி பண்ணியிருக்க கூடாது.. நானும் நிக்‌ஷனும் அப்படித்தான் இருந்தோம்! ஐஸு சொன்னத கேளுங்க

by Rohini |   ( Updated:2024-02-15 06:56:53  )
aish
X

aish

BiggBoss Aishu: விஜய் டிவியில் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற நிகழ்ச்சி என்றால் அது பிக்பாஸ் நிகழ்ச்சிதான். ஏழு சீசன்களாக உலகெங்கிலும் உள்ள தமிழ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த நிகழ்ச்சியாக பிக்பாஸ் நிகழ்ச்சி அமைந்து வருகிறது.

கமல் தொகுத்து வழங்குவதே இதன் கூடுதல் சிறப்பு. இந்த நிலையில் நடந்து முடிந்த ஏழாவது சீசனில் ஹாட் டாப்பிக்காக இருந்ததே ஐஸு மற்றும் நிக்‌ஷன் சம்பந்தப்பட்ட விஷயங்கள்தான். ஒரு கட்டத்தில் ஐஸுவிடம் நிக்‌ஷன் வரம்புக்கு மீறி நடந்து கொண்டது மக்கள் முகம் சுழிக்கவும் காரணமாக அமைந்தது.

இதையும் படிங்க:புதிய படத்தில் மீண்டும் கேமியோ பண்ணும் சூர்யா!.. ரோலக்ஸ் மாதிரி சும்மா தெறிக்குமா!..

இந்த நிலையில் நீண்ட நாள்களுக்கு பிறகு ஐஸு ஒரு தனியார் சேனலுக்கு தன் அனுபவங்களை தெள்ளத்தெளிவாக கூறியிருக்கிறார். அதாவது நிக்‌ஷனை பொறுத்தவரைக்கும் அவருக்கு என ஒரு வாழ்க்கை இருக்கிறது. மிகவும் திறமைசாமியான மனிதர் என்று கூறிய ஐஸு,

பிக்பாஸ் வீட்டிற்குள் நானும் சரி நிக்‌ஷனும் சரி ஒருவரையொருவர் எங்கள் விளையாட்டை கெடுத்துக் கொண்டுதான் இருந்திருக்கிறோம். இது நான் எவிக்ட் ஆகி வெளியே வந்த பிறகு சில எபிசோடுகள் பார்த்த பின்னர்தான் புரிந்தது என ஐஸு கூறியிருக்கிறார். இனிமேல் அந்தவொரு விபரீதம் எங்கள் வாழ்க்கையில் நடக்காது என கூறி இதற்கு இத்துடன் முற்றுப்புள்ளி வைக்கிறேன் என்றும் தெளிவு பட கூறினார்.

இதையும் படிங்க: ஃபைவ் ஸ்டார் ஹோட்டல்லதான் டிஃபன் வேணும்!.. பிளாப் கொடுத்தும் அடங்காத நடிகர்…

அதுமட்டுமில்லாமல் எனக்கும் அர்ச்சனாவுக்கும் இடையே ஒரு நாள் நைட்டில் கடும் சண்டை நடந்தது. அதில் நான் என் வாய்ஸை ஓவராக உயர்த்தி சத்தம் போட்டு பேசினேன். நான் சத்தமாக பேசினால் என் அம்மாவுக்கு பிடிக்கவே பிடிக்காது. ஆனால் அங்கு நான் அப்படி பேசிவிட்டேன். இதையும் டிவியில் பார்க்கும் போது எனக்கே என்னை பிடிக்கவில்லை.

அதனால் எனக்கு ஒரு டைம் மெசின் கிடைத்தால் அந்த நாள் இரவில் நடந்ததை கண்டிப்பாக மாற்றி அமைக்க வேண்டும் என விரும்புவதாக ஐஸூ கூறினார்.

இதையும் படிங்க: டைட்டிலை தவிர ஒன்னும் வரல.. ஆனால் அடுத்த படத்திற்கான ஹீரோயினை தட்டி தூக்கிட்டாரே அஜித்

Next Story