Connect with us
suriya

Cinema News

புதிய படத்தில் மீண்டும் கேமியோ பண்ணும் சூர்யா!.. ரோலக்ஸ் மாதிரி சும்மா தெறிக்குமா!..

நேருக்கு நேர் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கியவர் சூர்யா. நந்தா, காக்க காக்க, பிதாமகன் என நடிப்பில் வெரைட்டி காட்டி சினிமாவில் டேக் ஆப் ஆனார். சிங்கம், சிங்கம் 2, சிங்கம் 3 போன்ற படங்களில் நடித்து ஆக்‌ஷன் ஹீரோவாகவும் மாறினார்.

இவரின் நடிப்பில் வெளியான பல படங்கள் வெற்றியை பெற்றிருக்கிறது. ஒருபக்கம் மசாலா படங்களில் நடித்தாலும் மறுபக்கம் நல்ல கதையம்சம் கொண்ட படங்களிலும் சூர்யா நடித்து வருகிறார். இதற்கு பெரிய உதாரணமாக சூரரைப்போற்று மற்றும் ஜெய்பீம் ஆகிய படங்களை சொல்லலாம்.

இதையும் படிங்க: டைட்டிலை தவிர ஒன்னும் வரல.. ஆனால் அடுத்த படத்திற்கான ஹீரோயினை தட்டி தூக்கிட்டாரே அஜித்

இந்த இரண்டு படங்களிலும் சூர்யா சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டுக்களை பெற்றார். மேலும், சிறந்த நடிகருக்கான விருதுகளையும் பெற்றார். இப்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா படத்தில் நடித்து வருகிறார். பல மொழிகளிலும் வெளியாகவுள்ள இந்த படம் சூர்யாவின் சினிமா கேரியரில் ஒரு முக்கியமான படமாக இருக்கும் என நம்பப்படுகிறது.

ஹாலிவுட் ஸ்டைலில் ஒரு சரித்திர படமாக இப்படம் உருவாகியிருக்கிறது. ஒருபக்கம், சூரரைப்போற்று திரைப்படம் ஹிந்தியில் உருவாகி வருகிறது. இப்படத்தை தமிழில் இயக்கிய சுதா கொங்கராவே ஹிந்தியிலும் இயக்கி வருகிறார். இதில், அக்‌ஷய்குமார் ஹீரோவாக நடித்து வருகிறார். இந்த படத்தை சூர்யாவே தயாரித்தும் வருகிறார்.

இதையும் படிங்க: விஜய் 69-ஐ இயக்கப்போவது அந்த இயக்குனரா?! என்னப்பா டிவிஸ்ட்டுக்கு மேல டிவிஸ்ட்டா இருக்கு!.

சூர்யா ஹிந்தியில் தயாரிக்கும் முதல் திரைப்படம் இது. சமீபகாலமாக சூர்யா மும்பையில்தான் தங்கியிருக்கிறார். அதோடு, ஹிந்தி படங்களில் நடிப்பதிலும் ஆர்வம் காட்டி வருகிறார். கர்ணா எனும் ஹிந்தி படத்திலும் நடிக்கவுள்ளார். இந்நிலையில், சூரரைப்போற்று ஹிந்தி வெர்ஷனில் ஒரு கேமியோ வேடத்தில் சூரயா நடிக்கவிருக்கிறாராம். அந்த படத்தில் 3 காட்சிகளில் வருகிறாராம். அதோடு, கவுதம் மேனன் போல அப்படத்தின் கதையை வாய்ஸ் ஓவர் லாப்பிலும் சொல்லவிருக்கிறாராம்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடித்த விக்ரம் படத்தில் ரோலக்ஸ் எனும் வேடத்தில் வந்து அதிர வைத்தார் சூர்யா. அதுபோல் இந்த படமும் அமையுமா என்பது தெரியவில்லை. ஆனாலும், ஹிந்தி படத்தில் சூர்யாவை பார்க்க அவரின் ரசிகர்கள் ஆர்வமாகவே இருக்கிறார்கள். இந்த படம் ஜூலை 12ம் தேதி வெளியாகலாம் என சொல்லப்படுகிறது.

google news
Continue Reading

More in Cinema News

To Top