Connect with us
nix

Biggboss Tamil 7

நிக்‌ஷனுக்கு என்னால கன்ஃபார்மா ரெட் கார்ட் வாங்கித் தர முடியும்! இவங்களுக்குள்ள என்னமோ நடந்துருக்குய்யா

Nixon BiggBoss: விஜய் டிவியில் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் போய்க் கொண்டிருக்கிறது பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசன். இதுவரை இல்லாத அளவுக்கு வித்தியாசமான முறையில் வெளியான இந்த சீசன் நாளுக்கு நாள் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

முற்றிலும் புதுமையான முயற்சியில் வெளியான சீசனில் தற்போது 14 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கின்றனர். 50 நாள்களை கடந்து ஓடிக் கொண்டிருக்கும் பிக்பாஸ் வீட்டில் கடந்த சில தினங்களாகவே அர்ச்சனாவிற்கும் விஷ்ணுவிற்கும் இடையே கடுமையான வாக்கு வாதம் நடந்து கொண்டிருக்கின்றன.

இதையும் படிங்க: மூச்சுவிட சிரமப்படும் விஜயகாந்த்!.. அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை என்ன?!.. நடப்பது இதுதான்!..

அர்ச்சனாவிற்கு ஆரம்பத்தில் ஆதரவாக இருந்த விசித்ராவும் இப்போது அவருக்கு எதிராக சில விஷயங்களில் பேசி கொண்டு வருகிறார். அர்ச்சனாவிடம் என்ன பேசுவதென்றே தெரியாமல் சில போட்டியாளர்கள் குழம்பி போய்க் கொண்டிருக்கின்றனர்.

இதற்கிடையில் இந்த வார கேப்டனாக நிக்‌ஷன் இருக்கும் வகையில் அவர் மீது ஏதாவது குற்றச்சாட்டு இருந்தால் அதன் சரியான காரணத்தை கூறி மூன்று முறை மணி அடிக்கும் பட்சத்தில் இந்த கேப்டன் பதவியில்  இருந்து நிக்‌ஷன் நீக்கப்படுவார் என்றும் அவர் நேராக எவிக்‌ஷனுக்கு தகுதி பெறும் போட்டியாளராக கருதப்படுவார் என்றும் ஒரு விதிமுறை இருக்கிறது.

இதையும் படிங்க: நயன் பிறந்தநாளுக்கு வி்க்கி பரிசாக கொடுத்த கார் இத்தனை கோடியா?.. செம லவ்வு போல!…

ஏற்கனவே தினேஷ் ஒரு  முறை மணி அடித்துவிட்டார். இன்று வெளியான ப்ரோமோவில் மாயாவும் நிக்‌ஷனுக்கு எதிராக மணி அடிக்க இருக்கிறார். இதில் ரவீனாவும் மணியும் பேசும் ஒரு வீடியோ வைரலாகின்றது. அதில் ரவீனா ‘என்னால மூன்று முறை நிக்‌ஷனுக்கு எதிராக ஸ்டிரைக்  கொடுக்க முடியும். அதற்கேற்ப என்னிடம் பாய்ண்ட்ஸ் இருக்கிறது’ என கூறுகிறார்.

அதற்கு மணி ‘என்னால அவனுக்கு ரெட் கார்டே கொடுக்க முடியும். அந்தளவுக்கு என்னிடம் பாயின்ட்ஸ் இருக்கு.அத வெளில வந்து சொல்றேன். அந்தளவுக்கு நான் துடிச்சுட்டு இருக்கேன்’ என்று சொல்கிறார். ஏற்கனவே ஐஸு வீட்டில் இருக்கும் போது நிக்‌ஷனுக்கும் மணிக்கும் இடையே வாக்குவாதம் வந்த போது கூட மணி ‘என்னால எல்லாத்தையும் சொல்ல முடியும். சொன்னால் உன்னால தாங்க முடியாது’ என்று சொல்லியிருப்பார். ஆக யாருக்கும் தெரியாத ஒரு விஷயம் மணிக்கும் நிக்‌ஷனுக்கும் இடையே நடந்திருப்பதாகவே தெரிகிறது.

இதையும் படிங்க: அந்த நடிகையுடன் ஜோடி போட ஆசைப்பட்டு ஏமாந்துபோன ரஜினி!.. வடை போச்சே!..

google news
Continue Reading

More in Biggboss Tamil 7

To Top