Biggboss Tamil 7
ஆமாங்க அவ லவ் பண்றா! தொடரும் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த பிக்பாஸ் போட்டியாளரின் பாசமலர்
BiggBoss Season 7 : விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் போய்க் கொண்டிருக்கிறது பிக்பாஸ் சீசன்7. மற்ற சீசன்களை போல் இல்லாமல் முற்றிலும் மாறுபட்ட சீசனாகவே மக்கள் இதை பார்க்க ஆரம்பித்துவிட்டனர். எந்த சீசனிலும் இல்லாத பல புதுமைகளை இந்த சீசனில் கொண்டு வந்திருக்கிறார்கள்.
மேலும் பெரும்பாலான போட்டியாளர்கள் இளம் தலைமுறைகளாகவே இருக்கின்றனர். அதில் விசித்ரா மற்றும் யுகேந்திரன் ஆகிய இருவரும் தான் மூத்த வயதுடைய போட்டியாளர்கள். மற்ற அனைவரும் இன்றைய தலைமுறையினராக இருப்பதால் பிக்பாஸ் வீடு ஒரே துள்ளலும் கொண்டாட்டமுமாகவே காணப்படுகிறது.
இதையும் படிங்க: பிங்க் நைட்டியில் பளிச் அழகை காட்டும் பிக்பாஸ் பியூட்டி!.. ஷிவானி ரொம்ப சோம்பேறியாகிட்டாராம்!..
ஒரு பக்கம் அவர்களுக்குள் கொண்டாட்டங்கள் இருந்தாலும் தேவையில்லாத பிரச்சினைகளும் மனக்கசப்புகளும் வந்து கொண்டுதான் இருக்கின்றன. ஏற்கனவே இரண்டு வீடாக பிரிந்த பிக்பாஸ் வீட்ட்டில் குரூப் குரூப்பாக அமர்ந்து கொண்டு மற்றவர்களை பற்றி புரணியும் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
இதில் ரவீனா மற்றும் மணி இவர்களின் உறவை பற்றிய சந்தேகங்களும் பிக்பாஸ் வீட்டில் இருக்கும் சக போட்டியாளர்களுக்கு ஏற்பட்டுக் கொண்டே இருக்கின்றன. இதை பற்றி அவர்களிடமே கேட்டாலும் இப்போதைக்கு எந்த முடிவையும் நாங்கள் எடுக்கவில்லை என்று கூறி வாயை அடைத்து விடுகின்றனர்.
இதையும் படிங்க: ரஜினியின் கெரியரில் மைல்கல்லாக இருந்த அந்த ஒரு வருஷம்! இதுவரை எந்த நடிகரும் செய்யாத சாதனை
இந்த நிலையில் இன்னொரு போட்டியாளரான பூர்ணிமா பற்றிய கிசுகிசுக்களும் எழுந்த வண்ணம் இருக்கின்றன. வீட்டில் நுழைந்த மூன்றாவது நாளே ரசிகர்கள் பூர்ணிமாவை விஷ்ணுவுடன் சேர்த்து வைத்து பேசினார்கள்.
இப்போது விக்ரமுடன் சேர்த்து வைத்து பேச தொடங்கியிருக்கிறாரகள். இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதற்காக பூர்ணிமாவின் குடும்பம் சமீபத்தில் ஒரு தனியார் சேனலுக்கு பேட்டி கொடுத்திருக்கின்றனர்.
இதையும் படிங்க: நான்தான் தப்பு பண்ணிட்டேன்!. கமல் சார்கிட்ட மன்னிப்பு கேட்டுக்கிறேன்!.. உருகும் லிவிங்ஸ்டன்…
அதில் நாங்கள் காதலுக்கு எதிரானவர்கள் இல்லை என்றும் பூர்ணிமா காதலிப்பதற்கு முன் அது குடும்பத்துக்கு செட் ஆகுமா என்று பல தடவை யோசித்து முடிவெடுப்பவள் என்றும் திடீரென காதலில் விழுபவளும் இல்லை என்றும் கூறினர். பூர்ணிமாவின் சகோதரர் பிக்பாஸ் வீட்டில் பூர்ணிமா லவ் பண்ணிக் கொண்டுதான் இருக்கிறார் என்று சொல்லி,
அவர் காதலிப்பது கேமராவைத்தான், அந்த கேமராவிடம் தான் அதிக நேரம் பேசுவார் என்று தன் தங்கையின் மீது அதிக நம்பிக்கையுடன் கூறினார்.