ஓட்டுக்கு இப்படியெல்லாமா பண்ணுவீங்க! ரகசியம்னு நினைச்சு அம்பலப்படுத்திய பிக்பாஸ் போட்டியாளர்கள்

by Rohini |
biggi
X

biggi

BiggBoss Season7: ரியாலிட்டி ஷோக்களின் ஆதிக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றன. அதில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் பிக்பாஸ் நிகழ்ச்சி ரசிகர்களின் பேராதரவை பெற்று வருகிறது. எல்லா சீசன்களை விட இந்த சீசன் மிகவும் டஃப் சீசனாகவே மக்களால் பார்க்கப்படுகிறது.

இந்த சீசனில் கலந்து கொண்டு போட்டி போட்டு வரும் போட்டியாளர்கள் ஒருவருக்கொருவர் ஈடு கொடுத்து தங்களுடைய திறமைகளை காட்டி வருகின்றனர். யார் இந்த சீசனின் போட்டியாளர் என்று ரசிகர்களால் சொல்ல முடியாத அளவுக்கு கடுமையாக போட்டிப் போட்டுக் கொண்டு வருகிறார்கள்.

இதையும் படிங்க: கண்டிஷன் பெயில்ல வந்திருக்க.. வாயை மூடிக்கிட்டு வாடா.. டிடிஎஃப் வாசனுக்கு ஜெயில் வாசலில் விழுந்த திட்டு!..

ஒவ்வொரு வாரமும் ரசிகர்கள் வாக்களிக்கும் ஓட்டுக்களின் படி யார் குறைவான ஓட்டுக்களை பெறுகிறார்களோ அவர்களே அந்த வாரத்தில் எவிக்ட் ஆகும் போட்டியாளராக கருதப்படுவார். இந்த நிலையில் நேற்று விசித்ரா, தினேஷ், பிரதீப் ஆகிய மூவரும் பேசிக் கொண்டிருக்கும் மாதிரியான ஒரு க்ளிம்ப்ஸ் இன்று இணையத்தில் வைரலானது.

அதில் பிரதீப் ‘விஷ்ணு வெளியில் ஆள் செட் பண்ணி வைத்து விளையாடுவது போல் தோன்றுகிறது. இங்கே வந்தால் 50 லட்சம் கிடைக்கும். அதில் ஒரு 10 லட்சத்தை செலவு பண்ணி ஆள்களை தயார் செய்து வைத்திருப்பான். அவர்களை வைத்து அவனுக்கேற்ற வகையில் மீம்ஸ், வீடியோக்களை தயார் செய்து போடச் சொல்லியிருப்பான் என்றே எனக்கு தோன்றுகிறது’ என பிரதீப் கூறிக் கொண்டிருக்க,

இதையும் படிங்க: வீதிக்கு வந்த செழியன் பஞ்சாயத்து..! வீட்டில் எண்ட்ரியான மாலினி..! ஒத்த ரோசா வீடு தாங்காதும்மா..!

அதை குறுக்கிட்டு பேசிய விசித்ரா ‘ஆமா, அர்ச்சனா உள்ள வந்ததும் அதுதான் சொன்னா. விஷ்ணுவை பற்றி போஸ்டர்கள் தினமும் இணையத்தில் வந்து கொண்டிருப்பதாக் சொன்னாள்’ என விசித்ரா கூறினார். இதில் தினேஷ் ‘ நான் பிக்பாஸ் வீட்டிற்குள் வருவது தெரிந்தும் ஒரு சில கும்பல் என்னிடம் வந்த பணம் கேட்டார்கள். நாங்கள் ஓட்டுப் போட்டு ஜெயிக்க வைக்கிறோம்னு சொன்னார்கள்’ என தினேஷ் கூறினார்.

கடைசியாக் அந்த வீடியோவில் பிரதீப் ‘என்னத்த பணம் கொடுத்தாலும் நாம் எப்படி விளையாடுகிறோம்னு மக்கள் பார்க்கத்தான் செய்வார்கள். இப்போ நான் நன்கு விளையாடினால் விஷ்ணு ஒட்டுவோடு சேர்ந்து என் ஓட்டு எனக்கு வந்து சேரத்தான் செய்யும்’ என கூறினார்.

இதையும் படிங்க: வீட்டுக்கு வந்த மீனா… தன் வேலையை தொடங்கிய விஜயா… பழைய ஃபார்முக்கு வந்துட்டீங்க போல..!

Next Story