ஃபர்ஸ்ட் டைம் சொல்றேன்! இந்த வலி யாருக்கும் வரக் கூடாது - இயக்குனரால் நடுத்தெருவுக்கு வந்த பாலாஜி முருகதாஸ்

balaji
Balaji Murugadoss: பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் பாலாஜி முருகதாஸ். விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களில் மிக முக்கியமானதாக கருதப்படுவது பிக்பாஸ் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டவர்தான் பாலாஜி முருகதாஸ்.
அந்த சீசனில் இரண்டாவது இடத்தை தக்க வைத்துக் கொண்ட பாலாஜி முருகதாஸுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உருவாகினார்கள். மிகவும் கோபக்காரராகவும் முரட்டுத்தனமாகவும் இவர் செய்த அட்டகாசங்களே ரசிகர்களை இவர் பக்கம் இழுத்தது.
இதையும் படிங்க: தளபதியால ஹிட்தான் கொடுக்க முடியும்! ஆனால் வாழ்க்கை கொடுத்தது இவரு – அட்லீயின் வெற்றிக்கு காரணமான அந்த நடிகர்
அடுத்ததாக அல்டிமேட் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அதில் டைட்டில் வின்னரானார் பாலாஜி முருகதாஸ். சிறுவயதில் இருந்தே பெற்றோர் சப்போர்ட் இல்லாமல் தனி ஆளாக தன்னை உருவாக்கிக் கொண்டவர் பாலாஜி.
17வது வயதில் ஆக்டிங் க்ளாஸில் சேர்ந்தாராம். கிட்டத்தட்ட 10வருட போராட்டங்களுக்கு பிறகு ‘வா வரலாம் வா’ என்ற படத்தில் ஹீரோவாக களமிறங்கியிருக்கிறார் பாலாஜி முருகதாஸ். அந்தப் படத்தின் ப்ரோமோஷனுக்காக கலந்து கொண்ட பாலாஜி அவர் வாழ்க்கையில் நடந்த சில கசப்பான சம்பவத்தை கூறினார்.
இதையும் படிங்க: தமிழ் சினிமாவில் எல்லாத்துக்கும் முதல் படம்!. சத்தமில்லாமல் எம்.ஜி.ஆர் செய்த சாதனை!..
அதாவது அவருடைய ஒரே குறிக்கோள் காசு கொடுத்து நடிக்க கூடாதாம். அதே வேளையில் காசு வாங்காமலும் வேலை பார்க்கக் கூடாதாம். இதற்கு பின்னால் ஒரு கசப்பான சம்பவத்தை கூறினார். பாலாஜியின் நண்பர் பிரசாந்த் என்பவர் சௌந்தர் என்ற ஒரு இயக்குனர் இருக்கிறார். அவர் ஒரு தயாரிப்பாளரை பிடித்து வைத்திருக்கிறார்.
அந்த தயாரிப்பாளரிடம் ஷார்ட் ஃபிலிம் எடுத்துக் காட்டினால் அவர் வாய்ப்பு தருவாராம். அதனால் அந்த இயக்குனருக்கு ஒரு 180000 தொகை தேவைப்படுவதாக கூறி அந்த நண்பர் பாலாஜி முருகதாஸிடம் கேட்டிருக்கிறார். சரி நண்பர் கேட்கிறாரே என்று கல்லூரிக்கு கட்ட வேண்டிய தொகையை எடுத்து கொடுத்திருக்கிறார்.
இதையும் படிங்க: ஜெமினி கணேசன் படத்துக்கு சம்பளத்தை குறைக்க சொன்ன என்.டி.ராமராவ்… அப்புறம் என்ன ஆச்சு தெரியுமா?…
அவ்வளவுதான் அடுத்த நாளே அந்த நண்பரும் காணவில்லையாம். அந்த இயக்குனர் சௌந்தரும் காணவில்லையாம். இரண்டு பேரும் பாலாஜி முருகதாஸிடம் பணத்தை வாங்கிக் கொண்டு எஸ்கேப் ஆகிவிட்டார்களாம். கல்லூரிக்கு பணம் கட்ட முடியாததால் பாலாஜி கல்லூரி படிப்பை டிராப் செய்து விட்டாராம். இதை கூறும் போது பாலாஜி கண்கலங்கி பேசினார். அதனால் தான் அந்த குறிக்கோளுடன் இருக்கிறேன் என்றும் கூறினார்.