தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி பெரும் பேசு பொருளாக மாறியிருக்கிறது. பார்வதி , கம்ருதீன் செய்கையால் பல விமர்சனங்களுக்கு ஆளாகியிருக்கிறது. நேற்று சாண்ட்ராவை கார் டாஸ்க்கின் போது காரிலிருந்து புடிச்சு வெளியே தள்ளி விட்டிருக்கிறார்கள். இது ஒட்டுமொத்த பிக்பாஸ் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. இதை பற்றி பிக்பாஸ் போட்டியாளர் முத்துக்குமரன் ஒரு வீடியோவை வெளியிட்டிருக்கிறார். இதில் அவர் கூறியது:
நான் ஒரு பிக்பாஸ் போட்டியாளர் என்கிற பெருமையும் மகிழ்ச்சியும் எனக்கு எப்போதும் இருக்கிறது. ஏனெனில் தமிழ் நாடு மட்டுமில்ல உலகெங்கிலும் உள்ள எல்லா தமிழர்கள் அதாவது பெரியவர்கள் , குழந்தைகள், இளைஞர்கள் என எல்லார்கிட்டயும் சேருகிற ஒரு வாய்ப்பை இந்த நிகழ்ச்சி ஏற்படுத்திக் கொடுக்கிறது. அப்படிப்பட்ட ஒரு பெரிய நிகழ்ச்சியில் இருக்கிறோம் என்றால் நாம் ஒரு பொறுப்போடு இருக்க வேண்டும்.
நாகரீகமாக இருக்க வேண்டும். தெளிவாக இருக்க வேண்டும், சமூக அக்கறையுடன் இருக்க வேண்டும் என்கிற ஒரு எண்ணம் எங்களுக்கு இருந்ததனால்தான் அங்கு போனேன். ஆனால் இன்று இந்த நிகழ்ச்சியை பார்க்கும் போது ரொம்ப கஷ்டமாக இருக்கிறது. அந்த நிகழ்ச்சியில் அவர்கள் பயன்படுத்துகிற வார்த்தைகள், அவங்க நடந்துக்கிற விதம் எல்லாவற்றையும் பார்க்கும் போது எப்படி இந்த மாதிரி ஒரு பொதுமேடையில் செய்ய முடிகிறது என்பதை யோசிக்க வைக்கிறது.
இப்படிப்பட்ட ஆள்களை ஏன் இன்னும் பொதுமக்கள் ஓட்டு போட்டு உள்ள வச்சிருக்காங்கனு ஒரு கேள்வியை எழுப்புகிறது. கம்ருதீனும் பார்வதியும் நேற்று செய்ததை எல்லாரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு ரெட் கார்டு கொடுக்க வேண்டும் என சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
இதில் ரெட் கார்டு எதுக்கு கொடுக்கணும்னு ஒரு கேள்வி இருக்கிறது. எங்க சீசனில் ஒரு கேம் விளையாடினோம். அதில் பசங்க பெண் போட்டியாளர்களிடம் கடுமையாக நடந்து கொண்டோம். அப்போ விஜய்சேதுபதி சொன்ன ஒரு விஷயம் இப்போதும் நியாபகம் இருக்கிறது. ஒரு கேம் விளையாடுவது என்பது ஜெயிக்கிறதுக்கு மட்டுமில்ல. அதை எப்படி அணுக வேண்டும் என்பதில் இருக்கிறது என்று சொன்னார்.
ஒரு இக்கட்டான சூழ் நிலையில் ஒரு மனிதனுடைய முழுத்தன்மையும் குணமும் வெளிவருகிறது. ஒரு வேளை பார்வதிக்கும் கம்ருதீனுக்கும் ரெட் கார்டு கொடுக்கிறதா இருந்தால் சாண்ட்ராவை புடிச்சு கீழே தள்ளி விட்டாங்க அப்படிங்கிறதுக்காக இருக்க கூடாது. அது அவர்கள் தவறான வார்த்தைகளை பயன்படுத்தினார்கள், தப்பான விஷயங்களை செய்தார்கள், ஒரு போதும் தப்புனு உணராமல் கடைசி வரைக்கும் இருந்தாங்க அப்படினு காரணமாக இருக்கனும்னு நான் நினைக்கிறேன்.

பொதுவெளியில் நாம் எப்படியாக நடந்து கொண்டோம் என்றால் அது அந்த மாதிரி விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை இதன் மூலம் கற்றுக் கொண்டோம் என பிக்பாஸ் போட்டியாளர் முத்துக்குமரன் கூறியிருக்கிறார்.
